For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி செய்தது சரியா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபை உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியைப் புறக்கணித்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள்முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி.

தமிழக சட்டசபைக்கு திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.மதிமுக தனித்துப் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியுற்றது.

அதிமுக அணி மகத்தான வெற்றியை ஈட்டியது. மாறாக, பல நல்ல திட்டங்களை அமல்படுத்தியும் கூட பெரும்தோல்வியைச் சந்தித்தது திமுக அணி. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல திமுக தலைவர்கள்கூடமயிரிழையில்தான் வெற்றி பெற்றுள்ளனர். பல தலைகள் உருண்டன.

ஆளுங்கட்சியாக இருந்த திமுக இப்போது எதிர்க்கட்சியாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள்அமைச்சர் க.அன்பழகன் செயல்படவுள்ளார். செவ்வாய்க்கிழமை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சிநடந்தது. இதில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி, அமைச்சர்கள் தளவாய் சுந்தரம் மற்றும்செம்மலை ஆகியோர் மட்டுமே பதவியேற்க வரவில்லை.

அமைச்சர்கள் இருவரும் டெல்லியில் இருந்தனர். பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டு இருப்பதால் அவரும்வரவில்லை. ஆனால் சென்னையில் இருந்து கொண்டே கருணாநிதி சபைக்கு வராமல் புறக்கணித்தது பல்வேறுகேள்விகளை எழுப்பியுள்ளது.

மூத்த தலைவரான கருணாநிதி, தன்னை தேர்ந்தெடுத்த மக்களை அலட்சியப்படுத்துவது போல எம்.எல்.ஏ.வாகப்பதவியேற்காமல் புறக்கணித்தது சரியா என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

கருணாநிதி சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறார். முதல்வர் என்ற உயர் பதவியைவகித்துள்ளார். பொறுப்பான அரசியல் கட்சியின் தலைவராக இருந்திருக்கிறார். தற்போதைய அரசியல்தலைவர்களில் நிர்வாகத்திறமை அதிகம் உள்ள தலைவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். சிறந்த எழுத்தாளர்,நல்ல கலைஞர், கவிஞர் என பல சிறப்புகளைத் தனது பெயருக்குப் பின்னால் வைத்துள்ள கருணாநிதி, சட்டசபைபதவியேற்கும் நிகழ்ச்சியை அலட்சியப்படுத்தியது சரியல்ல என்ற பேச்சு எழுந்துள்ளது.

ஜெயலலிதாவை நேருக்கு நேர் சந்திக்கத் தயங்கியே கருணாநிதி சட்டசபைக்கு வரவில்லை. வேறொரு நாளில்சபாநாயகர் பதவியேற்ற பின் அவரது சேம்பருக்குச் சென்று தனியாக பதவியேற்றுக் கொள்ள கருணாநிதிதிட்டமிட்டிருப்பதாக திமுக தரப்பில் பேசப்படுகிறது. அதன்பின் அவைக் கூட்டங்களில் கூட கருணாநிதி கலந்துகொள்வது அரிது என்றும் பேசப்படுகிறது.

மக்கள் தங்களைப் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட அனுமதி கொடுத்திருகிறார்கள் என்பதை உணர்ந்து,மக்கள் பிரச்சினைகளை சபையில் உரக்கப் பேசி, மக்கள் சேவையாற்ற கருணாநிதி முன்வர வேண்டும் என்ற பலதரப்பு மக்கள் நினைக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களான கருணாநிதி, க. அன்பழகன் போன்றோரால் மக்கள்பிரச்சினைகளை சரியான முறையில் சபையில் எடுத்து வைக்க முடியும் என்று நம்பிய மக்களுக்கு, திமுக தலைவரின்செயல் பெரும் ஏமாற்றத்தையேக் கொடுத்துள்ளதாக திமுகவிலேயே சிலர் கருதுகிறார்கள்.

ஜெயலலிதா என்ற தனி நபரை மட்டும் பார்க்காமல் அதிமுக ஆட்சி என்ற நிலையில் பார்த்து, அந்த ஆட்சியின்நிறை, குறைகளைச் சுட்டிக்காட்டி முதிர்ச்சியடைந்த அரசியல் கட்சியாக திமுக செயல்பட வேண்டும் என்று அரசியல்நோக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஜெயலலிதா தனது எம்.எல்.ஏக்கள் மூலம் மறைமுகமாக கருணாநிதியை சபையில் அவமானப்படுத்தும் வாய்ப்புஇருப்பதாக திமுகவினர் கருதுகின்றனர். இதன் காரணமாகவே கருணாநிதி சபைக்கு வருவதைத் தவிர்க்கிறார்என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மற்றொரு தரப்பினர் இதை ஏற்க மறுக்கிறார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சபையில் என்னநடக்கிறது என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மூத்த அரசியல்வாதியான கருணாநிதி சபையில்அவமதிக்கப்பட்டால், நிச்சயம் அதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மக்களின் பிரச்சினைகளைக் கொண்டு செல்ல ஒரே இடம் சட்டசபைதான். அந்த சட்டசபையை புறக்கணித்து,மக்கள் தன்னை தேர்ந்தெடுத்ததை மறந்து, அவர்கள் கொடுத்த பதவியை ஏற்றுக் கொள்ளாமல்அலட்சியப்படுத்துவது மக்களை அவமானப்படுத்துவது போலாகும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுநலவுகிறது.

கேரள மாநில முதல்வராகப் பதவியேற்ற ஏ.கே.அந்தோணி, முதல்வர் பதவியேற்ற பின் முதல் வேலையாகமுன்னாள் முதல்வர் ஈ.கே. நாயனாரைப் போய் பார்த்து மரியாதை நிமித்தம் பேசினார் என்பதைச் சுட்டிக்காட்டும்தமிழக அரசியல் நடுநலையாளர்கள், அதே நிலையை ஜெயலலிதாவும் கடைப்பிடித்திருக்கலாம். கருணாநிதி மூத்தஅரசியல்வாதி, சிறந்த நிர்வாகி. அவரது ஆலோசனை நிச்சயம் தமிழக மக்களுக்கு நல்லதாகவே அமையும் என்றும்அவர்கள் கூறுகிறார்கள்.

எப்படியோ, கருணாநிதியின் செயல் பல சர்ச்சைகளைக் கிளப்பி விட்டது என்னவோ உண்மை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X