For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 அமைச்சர்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

அறநிலையத்துறை அமைச்சர் அய்யாறு வாண்டையார், தொழில்துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன்,உணவுத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின் பதவிகளை முதல்வர் ஜெயலலிதா பறித்தார்.

அவர்களுக்குப் பதிலாக ஜீவானந்தம், வைத்தியலிங்கம், சண்முகவேலு ஆகியோர் பதவியேற்றனர்.

கவர்னர் மாளிகையில் காலை 10 மணிக்கு தொடங்கி 10 நிமிடத்தில் முடிவடைந்த எளிய விழாவில் இவர்களுக்குஆளுநர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், அதிகாரிகள், பதவி இழந்த 3 அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் ஜீவானந்தத்துக்கு வேளாண்மைத்துறையும்,

வைத்தியலிங்க்ததுக்கு தொழில்துறையும்,

சண்முகவேலுவுக்கு பால்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஜீவானந்தம் நாகப்பட்டிணம் தொகுதியில் வென்றவர். சண்முகவேலு உடுமலைப்பேட்டையிலும்வைத்தியலிங்கம் ஒரத்தநாட்டு தொகுதியிலும் வென்றவர்கள்.

ஊழலற்ற ஆட்சி என்ற முழக்கத்துடன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள ஜெயலலிதாவின் அமைச்சரவையில்இருந்த இந்த 3 பேரில் 2 பேர் கடந்த திமுக ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற அவர்களிடமிருந்துபணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

வாண்டையாரின் உறவினர்கள் தேக்குமரக் கடத்தலில் பெரிய ஆட்கள் எனக் கூறப்படுகிறது. இதனால்,இவர்களின் பதவிகளை ஜெயலலிதா பறித்தார்.

ஆளுநருடன் ஜெ. ஆலோசனை:

அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆளுநர் பாத்திமா பீவியுடன் ஜெயலலிதா 15 நிமிடங்கள் தனியேபேச்சுவார்த்தை நடத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X