For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர்கள் டிரான்ஸ்பர்: ஜெ. புதிய நெறிமுறை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டிரான்ஸ்பர் விஷயத்தில் ஆசிரியர்களுக்கு நிறைய சலுகைகளை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வேண்டிய இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்படவும்,அதில் எந்தவிதமானகுறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நிர்வாகப் பணிகளில் எந்த விதமான குறைபாடும், ஒளிவு மறைவின்றியுமின்றி பகிரங்கமாக நடக்க வேண்டும்என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். குறைபாடுகள் சுட்டிக்காட்ப்பட்டால் அவை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறேன்.

இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி இடமாற்றம் தகவல்கள் பற்றி உத்தரவு வழங்கியுள்ளேன். ஆசிரியர்கள்பணி மாற்றத்தில் எந்தவிதமான குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறேன்.

ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து வகைஆசிரியர்களுக்கான பொது மாறுதல்களின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளும்வகுக்கப்பட்டுள்ளது.

அவை:

ஒரே பணியிடத்துக்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கோரிக்கை விடுத்திருந்தால் கீழ்கண்டவாறு முன்னுரிமைஅளிக்கப்படும்.

1) மாநில, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் கணவன், மனைவி இருவரும்ஓரிடத்தில் பணிபுரிய வேண்டி மாறுதல் கேட்பது. 2) ராணுவத்தில் பணிபுரிவோரின் மனைவி. 3) உடல் ஊனமுற்றஆசிரியர்கள் மற்றும் பார்வையற்ற ஆசிரியர்கள். 4) 50 சதவிகிதத்திற்கு மேல் உடல் ஊனமுற்றவர்கள் என்றமருத்துவ சான்றிதழ் பெற்றவர்கள். 5) ஆசிரியைகள்.

இந்த முன்னுரிமை அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மாறுதல் கேட்டிருந்தால். தற்போது பணிபுரியும்இடத்தில் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்கப்படும். மனமொத்த மாறுதல்களும்ஏற்கப்படும்.

மலைப்பகுதிகளில் இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள நடைமுறையில் உள்ள மலைச்சுழற்சிமாறுதல் முறையே பின்பற்றப்படும்.

இந்த நெறிமுறைப்படி பணி மாறுதல் வழங்குவதற்காக, அனைத்து கல்வி நிர்வாக அலுவலகங்களில் நிரப்பப்படத்தகுதியான காலியிடங்களில் பெயர் பட்டியல்கள், மற்றும் மாறுதல் நெறிமுறைகள் ஆகியவை தகவல் பலகையில்மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

மாறுதல்கள் வழங்குவதற்கான உத்தரவை அளிக்கக்கூடிய அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட நாள், இடம் ஆகியவற்றைஅறிவித்து, மாறுதல் கேட்டுள்ள அனைத்து ஆசிரியர்களையும் அங்கு வரவழைத்து, அவர்கள் முன்னிலையிலேயேவிரும்பிய காலிப் பணியிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறைப்படி அப்போதே மாறுதல்கள் வழங்குவார்கள்.

நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டாலோ அல்லது குறைபாடுகளிருந்தாலோ அல்லது முன்னுரிமைஅடிப்படையில் மாறுதல் செய்யப்படவில்லை என்ற எண்ணம் தோன்றினாலோ அதை உடனடியாக என்னுடையகவனத்திற்கு கொண்டுவருமாறு ஆசிரியர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இனி இடைத்தரகர்களை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்.இந்த முயற்சிக்கு அனைத்து ஆசிரியர்களும், அரசுஅலுவலர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X