For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெஜாரிட்டியை இழந்தது சந்திரிகா அரசு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி, ஆளும் கட்சியான மக்கள் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை புதன்கிழமைபிற்பகல் வாபஸ் பெற்றது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை சந்திரிகா அரசு இழந்துள்ளது.

மக்கள் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அமைச்சருமானஹக்கீமை பதவி நீக்கம் செய்ததையடுத்து அக்கட்சியினர் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ்பெற்றுள்ளதாக அறிவித்தனர்.

முன்னதாக, அதிபர் சந்திரிகா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவரும்வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருமான ஹக்கீமை புதன்கிழமை பதவிநீக்கம் செய்தார். மக்கள் கூட்டணிக்குபல நெருக்கடிகளைக் கொடுத்து வருவதாகவும் அவர் மீது குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி, சந்திரிகா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது.முஸ்லீம் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் 10 பேரும் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

கடந்த வருடம் சந்திரிகா அரசு பதவியேற்றுக் கொண்டதிலிருந்து இவர்கள் மக்கள் கூட்டணிக்கு ஆதரவு அளித்துவருகின்றனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மக்கள் கூட்டணிக்கு 116 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 11 பேர். இவர்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதையடுத்துசந்திரிகா அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

ஆதரவை வாபஸ் பெற்றது குறித்து, மசூதியில் தொழுகை நடத்தி விட்டு வந்த ஹக்கீம் கூறுகையில், நாங்கள் மக்கள்கூட்டணியிலிருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளோம் என்றார்.

ஏற்கனவே இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் ஹக்கீமுக்கும், பெரியல் அஷ்ரபுக்கும் இடையே பிளவுஏற்பட்டிருந்தது. ஹக்கீமுக்கு ஆதரவாக 7 எம்.பிக்களும், பெரியலுக்கு ஆதரவாக 4 எம்.பிக்களும் இருந்தனர்.

சந்திரிகா, ஹக்கீமை பதவி நீக்கம் செய்ததையடுத்து, பிளவு ஏற்பட்டிருந்த முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமைஏற்பட்டுள்ளது. அதாவது ஹக்கீமுக்கு ஆதரவாக பெரியலும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து பெரியல் கூறுகையில், ஹக்கீமைப் பதவி நீக்கம் செய்தது எங்கள் கட்சிக்குக் கிடைத்த மிகப்பெரியஅவமானமாகக் கருதுகிறோம். அதனால் நாங்கள் மக்கள் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ்பெறுகிறோம் என்றார்.

இதற்கிடையே, பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள தலைமை நீதிபதி சரத் சில்வாவை விசாரிக்கவிசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வந்தது.

ஆனால் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைப்பதற்கு 3 நீதிபதிகள்கொண்ட குழு சபாநாயகருக்குத் தடை விதித்தது.

சுப்ரீம்கோர்ட்டின் இந்தத் தடையை மீறப்போவதாகவும், சந்திரிகா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்கொண்டு வரப்போவதாகவும் அறிவித்துள்ள நிலையில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வாபஸ்பெற்றுள்ளது.

தற்போது முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால் மக்கள் கூட்டணியின் பலம் 105 ஆகக்குறைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 எம்.பிக்களில் சந்திரிகா கூட்டணிக்கு தற்போது 105 எம்.பிக்கள் மட்டுமேஉள்ளனர். இதில் சிறுபான்மை தமிழர் கட்சிகளின் எம்.பி.க்களும் அடக்கம். இதனால் சந்திரிகா அரசுபெரும்பான்மையை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் உள்ள எம்.பி.க்கள்: 225

மக்கள் கூட்டணி: 105

ஐக்கிய தேசியக் கட்சி: 109

முஸ்லீம் காங்கிரஸ் கட்சி: 11

சந்திரிகா அரசு பெரும்பான்மையை நிருபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X