For Daily Alerts
புதரில் வீசப்பட்ட பெண் சிசு உயிருடன் மீட்பு
திண்டுக்கல்:
பிறந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் இருந்த பெண் சிசு ஒன்று முட்புதரிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டது.
திண்டுக்கல்லில் உள்ள ஆரோக்கியமாதா வீதியிலுள்ள முட்புதரில் ஒரு பெண் சிசு உயிருடன் கிடந்தது. இந்தப்பெண் சிசுவின் அழுகை சத்தம் கேட்காமல் இருக்க அதன் வாயில் துணியை வைத்துள்ளனர்.
மேலும், அந்த சிசு எறும்புகளுடன் முட்புதரில் கிடந்துள்ளது. இதனைக் கண்ட ஆட்டோ டிரைவர் அந்தோணிஎன்பவர், அதை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அந்த சிசு தற்போது மருத்துவமனையின்பாதுகாப்பில் உள்ளது.
பிறந்த 10 நாட்களே ஆன அந்த பெண் சிசு பற்றி போலீசாரிடமும் அந்தோணி தகவல் தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!