மாறன், டி.ஆர். பாலு விடுதலை
சென்னை:
சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோரை விடுதலை செய்யசென்னை சைதாப்பேட்டை கோர்ட் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியைக் கைது செய்யும் போது, போலீஸாரைத் தாக்கியதற்காகவும், தமிழகப் போலீஸாரைப்பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும், மத்திய அமைச்சர்கள் மாறனும், பாலுவும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் குறித்து கடும் கண்டனத்தை வெளியிட்ட மத்திய அரசு, மத்திய அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டதையும் கடுமையாகக் கண்டித்தது. இதையடுத்து, மத்திய அமைச்சர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்என்று பல முனைகளிலிருந்தும் கணைகள் பாய்ந்து வந்தன.
ஆளுநரைத் திரும்ப அழைத்த கையோடு, மாறனையும் பாலுவையும் விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்மத்திய அமைச்சரவை எடுத்துக் கொண்டிருந்தது. தமிழக நிலையை நேரில் ஆராய மத்தியில் இருந்து வந்த குழுக்களும், மத்தியஅமைச்சர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்திருந்தன.
இதற்கிடையே மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லியை திங்கள்கிழமை பிற்பகல் சந்தித்த அதிமுக அமைச்சர்கள்பொன்னையனும் தம்பித்துரையும், விரைவில் மாறனும் பாலுவும் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜேட்லியிடம்உறுதியளித்தார்கள்.
இந்நிலையில், அரசியல் சட்டம் 256 மற்றும் 257 பிரிவுகளைப் பயன்படுத்தி, 2 மத்திய அமைச்சர்களையும் உடனடியாகவிடுவிப்பதற்கான உத்தரவை மத்திய அரசு தயாரித்துக் கொண்டிருந்தது.
ஆனால் அதற்குள்ளாகவே தமிழக அரசு சுதாரித்துக் கொண்டுவிட்டது. மத்திய அமைச்சர்கள் 2 பேரையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்று சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி திங்கள்கிழமை மாலை தமிழகப் போலீஸ் டி.ஜி.பிக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அவர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் உடனடியாகப் பறந்தன.
மத்திய அமைச்சர் மாறன் தற்போது அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விடுதலையான போதிலும்,அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு மத்தியஅமைச்சர் பாலு, இன்னும் 2 மணி நேரங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இவர்கள் 2 பேர் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருக்கும். தற்போது இவர்களுக்கு ஜாமீன் மட்டுமேஅளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications