ஜெயலலிதா ஆட்சியை கலைத்திருக்க வேண்டும்: திமுக கோபம்
சென்னை:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்ட நிலையில் ஜெயலலிதா அரசை மத்திய அரசு கலைத்திருக்கவேண்டும் என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.
போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து, இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழகத்தில் ஜெயலலிதா அரசை கலைத்திருக்க வேண்டும்.
கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தன. போலீஸார் ஒரு முன்னாள்முதல்வரிடமும், 2 மத்திய அமைச்சர்களிடமும் மிகவும் அராஜகமாக நடந்து கொண்டார்கள்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்திய அரசியல் சட்டப்பிரிவு 356 ஐப் பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதிஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியிருக்க வேண்டும். ஜெயலலிதா அரசு உடனடியாக கலைக்கப்பட்டிருக்கவேண்டும்.
இந்தியாவின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் நான் 400 மில்லியன்டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முக்கியப் பொறுப்பு வகிப்பவன். என்னிடமே போலீஸார் மிக, மிகக்கீழ்த்தரமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!