ஜெ அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமா? உளவுத்துறை ரகசிய சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக ஆளுநர் பாத்திமா பீவி நீக்கப்பட்டதற்கு தமிழக மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியிருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையின் உளவுப் பிரிவு நடத்திய ரகசிய சர்வேயில் இது தெரியவந்தது.

சென்னை நகரில் பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் முதல்வர்கருணாநிதி அதிரடியாக சனிக்கிழமை அதிகாலையில் முரட்டுத்தனமாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம்அகில இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி கைது மற்றும் அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலுஆகியோர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்றுகூறி மாநில ஆளுநராக இருந்த பாத்திமா பீவி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

தமிழக மக்கள் மத்தியில் இதற்கு முழுமையான ஆதரவு இல்லை என்று தெரிய வந்துள்ளது. தமிழக போலீஸ்உளவுத்துறை நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் மனதில், பாத்திமா பீவி நீக்கப்பட்டது தவறு; அரசின் செயலுக்கு அவர் என்ன செய்வார்என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. அரசு மீது நடவடிக்கை எடுக்கத் தைரியமில்லாமல் ஆளுநரை நீக்கி,தங்களது இயலாமையை மத்திய அரசும், திமுக கூட்டணிக் கட்சிகளும் வெளியிட்டுள்ளதாக இவர்கள்கருதுகிறார்கள்.

ஜெயலலிதா பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆளுநர் நினைத்திருந்தாலும் கூட ஜெயலலிதாவைத் தடுத்திருக்கமுடியாது. அப்படியிருக்கும்போது, முதல்வர் ஜெயலலிதா செய்ய நினைக்கும் செயல்களைத் தடுப்பது பாத்திமாபீவியால் முடியாத காரியம்.

எனவே அரசின் செயல்களுக்கு ஆளுநர்தான் காரணம் என்று முடிவு எடுப்பது தவறானது. கருணாநிதிவிவகாரத்தில் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருந்திருக்கும். அதை விட்டு பாத்திமா பீவிமீது நடவடிக்கை எடுத்தது சரியானதல்ல என்று இந்த பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்.

மேலும், தமிழகத்தில் இப்போது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்தால் அதுவும் மக்களிடம் ஆதரவைப்பெறாது என்றும் தெரிய வந்துள்ளது. ஒரு தேர்தலை முடித்து விட்டு இப்போதுதான் ஆற அமர அமர்ந்திருக்கும்பொதுமக்கள் இன்னொரு தேர்தல் வந்தால் நிச்சயம் தாங்க முடியாது என்று நினைக்கிறார்கள். மேலும்,ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது ஆட்சியைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்தினார்களா?

கருணாநிதி மீதும் ஊழல் புகார்தான் சுமத்தப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்ட விதம்தான் தவறே தவிர அவர்மீது வழக்குப் போடக் கூடாது என்று யாரும் கோரவில்லை. எனவே இதற்காகவெல்லாம் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்தினால் அது மிகப் பெரிய தவறு என்ற எண்ணம் பெரும்பாலான மக்கள் மனதில்எழுந்துள்ளது.

எனவே ஆளுநர் நீக்கம், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையும் மக்களிடையேஆதரவைப் பெறவில்லை என்று தெரிகிறது.

அதே சமயத்தில், கருணாநிதி கைது செய்யப்பட்டதும், மத்திய அமைச்சர்கள் தாக்கப்பட்டதும் மிகப் பெரியஅளவில் தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஜெயலலிதா அரசுக்கு இதுமிகப் பெரும் கருப்புப் புள்ளி என்றும் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+