For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை குடிநீர் பிரச்சனை: தூசி தட்டப்படும் பழைய திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருக்கும் குடிநீர்ப் பிரச்சனையைக் கருத்தில் கொண்டுபள்ளிப்பாளையம் குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள்சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் குப்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காவேரி நீரை சென்னைக்கு கொண்டுவரப் போடப்பட்ட இத்திட்டம் வீராணம் திட்டத்தைவிடச் சிறந்தது.

18 ஆண்டுகளுக்கு முன் 1983 ஆம் ஆண்டு அப்போது முதல்வராயிருந்த எம்.ஜி.ஆரிடம் இத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இத்திட்டம், பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு2025 ம்ஆண்டு வரை குடிநீர்ப் பிரச்சனை வராதவகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்போதைய சூழ்நிலையில் காவேரியிலிருந்து தான் குடிநீர் எடுக்க முடியும். இத்திட்டத்திற்கு 900 முதல் 1000கோடி ரூபாய் வரை செலவாகும். முடிப்பதற்கு 3, 4 ஆண்டுகள் ஆகும். இது காவேரி விவசாயிகளின்விவசாயத்தைப் பாதிக்காது. இதிலிருந்து "ஹைட்ரோ பவரும்" எடுக்க முடியும்.

மேலும், வீராணம் திட்டத்திலிருந்து பெறும் தண்ணீரை விட 12 மடங்கு நீரை அரசு இத்திட்டத்தின் மூலம்பெறமுடியும். இத்திட்டம் பற்றிய முழு விளக்கமும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்டது. அவர்இதை சம்பந்தப்பட்ட பெருநகர் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம், இத்திட்டம் பற்றிய அவர்களின் கருத்தை அறியஅனுப்பியுள்ளார்.

பள்ளிப் பாளையத்திலிருந்து கொண்டு வரப்படும் 11 டி.எம்.சி. தண்ணீரை, சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம்,பூண்டி, செங்குன்றம் ஆகிய 3 ஏரிகளில் தேக்கி வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். செம்பரம்பாக்கம் -காவேரியை இணைக்கும் கால்வாயின் வழியில், மின் வாரியத்தால் மின்சாரம் எடுக்கக் 4 தடுப்பு அணைகள்கட்டப்பட்டுள்ளன.

இதுதவிர, மேலும் 3 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த 7 அணைகளுமே இத்திட்த்திற்குப் போதுமானது.மேலும் புதிய அணைகள் கட்டத் தேவையில்லை.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இத்திட்டத்திலுள்ள ஒரேசிக்கல் என்னவென்றால் கால்வாய் வரும் வழியில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். இதற்கு, அரசுநிலம் வழங்குபவர்களுக்கு நிலத்திற்குத் தகுந்த விலையோடு, அவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணியும் அளித்துஊக்குவிக்கலாம்.

இந்தக் கால்வாய் திருச்சி, வடஆற்காடு, மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சியடையாதகிராமங்களின் வழியாக வருகிறது. இதனால் அந்த வழியிலுள்ள கிராமங்களுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரஏதுவாக இருக்கும்.

வரும் 21ந்தேதி இத்திட்டம் குறித்த கருத்தரங்கம் ஒன்றை எங்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளோம்என்றுகுப்புராஜ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X