உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட அகில இந்திய காங்கிரஸ்தலைமை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனாலும் அப்போதுகாங்கிரசுக்கு மூப்பனாரின் தயவால் 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகு அ.தி.மு.கவை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்மறைமுகமாக விமர்சிக்க தொடங்கியதால். அ..தி.மு.கவுக்கும், தமிழக காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுசற்று அதிகமானது.

இளங்கோவனின் பேச்சுக்கள் அ.தி.மு.கவிற்கு கோபத்தை அதிகப்படுத்தியது. இளங்கோவன் தமிழக காங்கிரசின்தலைவராக இருக்கும் வரை காங்கிரஸ்-அ.தி.மு.கவுக்கு இடையே எந்த விதமான உறவும் வைத்துக் கொள்ளமுடியாது என்று அ.தி.மு.க கூறியது.

இளங்கோவன் எதிர்ப்பாளர்கள், அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றுவலியுறுத்தி வருவதையும் அகில இந்திய காங்கிரஸ் தலைைமை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட சோனியா காந்திஅனுமதித்து விட்டதாக இளங்கோவன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக இளங்கோவன் தயாராகி வருகிறார். தேர்தலில் போட்டியிட அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்பட்டியலை தயாரித்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்குமாறும் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள நகராட்சிகள், கிராம பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் குறித்தவிவரங்களையும், தகுதியான வேட்பாளர்கள் பட்டியலையும் இந்த மாத இறுதிக்குள் அனுப்பவும் இளங்கோவன்உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தை கிராமம் மற்றும் நகரங்களில் வார்டு வாரியாக கொண்டாடுமாறும் அன்றே உள்ளாட்சிதேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குமாறும் மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலம் குறித்தும், காமராஜ் தமிழக முதல்வராக இருந்த போதுநிறைவேற்றப்பட் திட்டங்கள் குறித்தும், அதன் பின் திராவிட ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் மக்களுக்குவிளக்குவதற்காக சிறப்பு பேச்சாளர்களைக் கொண்டு கூட்டம் நடத்த மாவட்ட தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற