செப்டம்பர் 6-ம் தேதி காவிரி நதி நீர் ஆணையம் கூட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் 6ம் தேதி காவிரி நதி நீர் ஆணையத்தின்கண்காணிப்புக் குழு கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத் தகவலை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று (சனிக்கிழமை)தெரிவித்தார்.

காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால், பாசனத்திற்கு போதிய நீர் இல்லாமல் தமிழகத்தில் குறுவைப் பயிர்கள்வாடுகின்றன. இந்தப் பயிர்களை காக்க காவிரியில் கர்நாடகம் உடனடியாக நீரைத் திறந்துவிட வேண்டும என ஜெயலலிதா கோரி வருகிறார்.

இது குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்தின் கண்காணிப்ப்பு குழு கூட்டத்தை கூட்டவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், பிரதமரோ கடிதம்பெற்றுக் கொண்டேன் என்று ஒரு அக்னாலட்ஜ்மென்ட்டை மட்டும் தமிழக முதல்வருக்குஅனுப்பிவிட்டு அமைதி காத்தார்.

இதையடுத்து காவிரி விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாகஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து இப்போது மத்திய அரசு காவிரி ஆணையத்தின் கண்காணிப்புக் குழுக்கூட்டத்தை நடத்த முன் வந்துள்ளது.

கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கும் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்,காவிரி விவகாரம் குறித்துப் பேச வரும் 26ம் தேதி நேரம் ஒதுக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.

கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது.ஆனால் ஜெயலலிதா கோரியபடி 26ம்தேதி பேச்சுவார்த்தை நடத்தமுடியாது என்று கூறிவேறு தேதியை விரைவில் தமிழகஅரசுக்கு தெரிவிப்பதாக கர்நாடக அரசின் நீர்வளத்துறை எச்.கே பட்டீல் கூறினார்.

தமிழகத்தின் பிரச்சனையை மத்திய அரசும் கர்நாடகமும் தட்டிக் கழித்தன.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக சட்டசபையிலேயேஜெயலலிதா குறை கூறியதையடுத்து இப்போது திடீரென காவிரி நதிநீர் ஆணையத்தின்கண்காணிப்பு குழு கூட்டத்தை அடுத்த மாதம் 6ம் தேதி நடத்துவதாக மத்திய அரசுஅறிவித்துள்ளது.

இது குறித்து ஜெயலலிதா கூறியதாவது:

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்த்து வைக்கும் விதமாக காவிரி நதிநீர்ஆணையத்தின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துபிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதியிருந்தேன்.

இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின்கண்காணிப்புக் குழு கூட்டம் அடுத்த மாதம் 6ம் தேதி கூட்டப்படும் என்று மத்தியநீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் வாடும் பயிர்களைபாதுகாப்பதற்காக, கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்துதமிழக - கர்நாடக அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை குறித்த தேதியைவிரைவில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

டெல்லியில் இருக்கும் கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகதமிழக பொதுப்பணித்துறை டெல்லி சென்றுள்ளார் என்று வெளியாகியுள்ள தகவல்கள்தவறானது.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர், கர்நாடக முதல்வரை சந்திப்பதற்காக டெல்லிசெல்லவில்லை. அவர் வேறு சில பணிகளின் நிமித்தமாகத்தான் டெல்லி சென்றுள்ளார்என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற