For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் எல்லோருக்கும் பொதுவானவன்: காளிமுத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

"நான் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவானவன். நடுநிலையோடு நடக்கிறேன்" என்றுசபாநாயகர் காளிமுத்து கூறினார்.

சட்டசபையில் அனாதை என்ற வார்த்தையை அமைச்சர் வளர்மதி பயன்படுத்தியது அவைக்குறிப்பில் உள்ளது.ஆனால் ஜி.கே. மணி கூறியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சியினர்கூறியிருந்தனர்.

சபாநாயகர் காளிமுத்து ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றும் அவர் தன்னிச்சையாக நடந்துகொள்ளவில்லை என்றும் முன்னாள் அமைச்சரும், திமுக உறுப்பினருமான துரைமுருகன் குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து சபாநாயகர் காளிமுத்துவின் கருத்தை செய்தியாளர்கள் புதன்கிழமை நிருபர்கள் கேட்டனர். அப்போதுகாளிமுத்து கூறுகையில்,

நான் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவானவன். நடுநிலையோடுதான் நடந்து கொள்கிறேன்.

அமைச்சர் வளர்மதி, ராமதாசை அனாதை என்று கூறவில்லை. அவ்வாறு அவர் கூறியிருந்தால் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியிருக்கலாம்.

யோக்கியதை என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா? அதை நீக்க வேண்டும் என்று ஜி.கே. மணி கூறினார். அவைமுன்னவர் பொன்னையன், நீக்கிவிடலாம் என்று கூறினார்.

ஆனால் நாடாளுமன்ற விதிப்படி பயன்படுத்தலாம் என்றாலும், அந்த வார்த்தையை பயன்படுத்தினால் அவர்கள்மனம் புண்படும் என்பதால் அந்த வார்த்தையை நீக்க உத்தரவிட்டேன்.

அனாதை என்ற வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியிருந்தால், அதை நீக்க வேண்டும் கோரி இருக்கலாமே.ஆனால், ஜி.கே. மணி வேறு எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை.

எனக்கு எந்த வற்புறுத்தலும் கிடையாது. என்னை சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுத்த போதே, நான்நடுநிலையோடு செயல்பட வேண்டும், நடுநிலையோடு நடந்து கொண்டு கட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும்என்றுதான் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

நான் நிச்சயமாக நடு நிலையோடுதான் நடந்து கொள்கிறேன். திமுகவில் இருப்பவர்கள் எல்லோரும் என் பழையநண்பர்கள்தான். எனக்கு எந்த கட்சி மீதும் விரோதம் கிடையாது. எல்லா உறுப்பினர்களையும் சமமாகவேமதிக்கிறேன்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள்கூட, "எங்கள் பக்கம் திரும்பாமல் எங்கள் வாய்ப்பை பறிக்கிறீர்களே, எங்களை பேசவிடமாட்டேன் என்கிறீர்களே" என்று கேட்கிறார்கள். நான் உறுப்பினர்கள் அனைவரின் ஜனநாயக கடமையைஆற்ற எல்லா ஒத்துழைப்பையும் தருகிறேன். எனவே எதிர் கட்சியினர் இது போன்ற மனப் போக்கை வளர்க்கவேண்டாம்.

எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்வது அவர்களது உரிமை. அரசியல் காரணங்களுக்காக அவர்கள் வெளிநடப்புசெய்தால் அவர்களை நான் எவ்வாறு சமாதானப்படுத்த முடியும். சட்டசபையில் உறுப்பினர்களுக்கு கருத்து சொல்லஉரிமை உண்டு. எதிர்க் கட்சிகளுக்கு உள்ள அதே உரிமை ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் உண்டு.

உறுப்பினர்கள் எண்ணிக்கையின் விகிதாசாரப்படி நேரத்தை பகிர்ந்தளித்துக் கொடுத்தால் பலருக்கு பேசுவதற்குவாய்ப்பே கிடைக்காது.

தன்னைப்போல் ஒரே உறுப்பினராக உள்ள லத்தீப், உசிலம்பட்டி சந்தானம் ஆகியோருக்கு முன் வரிசையில் இடம்ஒதுக்கப்பட்டுள்ளது. சுயேட்சை உறுப்பினரான எனக்கு இறுதி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றுஅப்பாவு கூறியுள்ளார்.

அப்பாவு சுயேட்சை உறுப்பினர். லத்தீப் தேசிய லீக் கட்சியின் தலைவர். சந்தானம் பார்வார்டு பிளாக் கட்சிதலைவர். மூத்த உறுப்பினர்கள். அந்த அடிப்படையில்தான் அவர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.

இவர்கள் வயதையும், மூத்த உறுப்பினர்கள் என்பதையும் எம்.ஜி.ஆர். அதிமுக உறுப்பினர் ஆண்டிமடம்ஆஸ்டினிடம் கூறி அந்த அடிப்படையில்தான் அவர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றுகூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். முதல் வரிசையில் இடம் வேண்டும் என்றால் அது குறித்துபரிசீலிக்கலாம் என்றார் காளிமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X