ஸ்டாலின் வீட்டில் நுழைந்த 3 போலீஸ் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட அன்று, சென்னை மேயர் ஸ்டாலின் வீட்டில் அத்துமீறிநுழைந்தததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 போலீஸ் அதிகாரிகள் மனித உரிமை கமிஷன் நீதிமன்றத்தில்ஆஜரானார்கள்.
இந்த மனுவை மனித உரிமை கமிஷன் நீதிபதிகள் சாமிதுரை, சம்பந்தம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாணைக்காக சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளான கிண்டி துணைக் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், தென்சென்னை துணைக் கமிஷனர் சமுத்திர பாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர் தாண்டவராயன் ஆகியோர் நேற்று நீதிபதிகள்முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
"இந்த வழக்கில் மனித உரிமைகள் கமிஷன் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாகவும், அதற்கான உத்தரவு நகலை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கிறேன்" என்றும் அரசு வக்கீல்கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கை 13ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!