For Daily Alerts
நாளை பதவியேற்கிறார் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுபாஷன் ரெட்டி புதன்கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.கே. ஜெயின் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதில் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்து வரும் சுபாஷன் ரெட்டி, சென்னைஉயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
புதன்கிழமை சுபாஷன் ரெட்டி பதவியேற்கவுள்ளார். அவருக்கு மாநில ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!