தமிழகத்தில் மேல்சபை: திமுக. தீர்மானத்தை ரத்து செய்ய அதிமுக முடிவு
சென்னை:
தமிழகத்தில் மேல் சபையைக் கொண்டு வருவதற்காக திமுக நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யும் விதமானதீர்மானம் தமிழக சட்டசபையில் இன்று (புதன்கிழமை) கொண்டுவரப்படவுள்ளது.
இந்த தீர்மானம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு மேல்சபை கலைக்கப்பட்டது.
1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பதவியேற்ற பின் மீண்டும் தமிழகத்தில் மேல்சபையைக்கொண்டுவருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார். அப்போது காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செலுத்தியகாரணத்தால், தி.மு.க அரசு நிறைவேற்றிய தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை.
1996ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த போது மீண்டும் மேல் சபையை கொண்டு வரும தீர்மானம் தமிழகசட்டசபையில் கொண்டு வந்து. 1998ம் ஆண்டு அது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது
அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முன்னணிக்கு தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால்இந்த முறையும் மேல்சபை கொண்டுவரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை.
இந்நிலையில் மத்தியில் பாரதீய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியில் அ.தி.மு.கவும் அங்கம் வகித்தது,.இதன் காரணமாக தமிழகத்தில் மேல் சபை கொண்டு வரும் தீர்மானம் நாடாளுமன்றத்திற்குகொண்டுவரப்படவில்லை,
அப்போது அ.தி.மு.க. வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதன்பின் வந்ததேர்தலில் தி.மு.க - பா.ஜ.க, கூட்டணி ஏற்பட்டு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து அந்த ஆட்சிதற்போதும் நடந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் எந்த தீர்மானம் நிறைவேற வேண்டுமென்றால் நாடாளுமன்றதின் இரண்டு சபைகளிலும்மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். ஆனால் வாஜ்பாய் அரசுக்கு மத்தியில் போதிய ஆதரவு இல்லாதகாரணத்தால் தமிழகத்தில் மேல் சபை கொண்டு வரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. பதவியேற்றது.
மேல்சபை தேவையில்லை என்பது அ.தி.மு.கவின் கருத்து. இதனால் தமிழக சட்டசபையில் மேல் சபையைகொண்டுவர வேண்டும் என்று தி.மு.க.நிறைவேற்றியதை ரத்து செய்ய அ.தி.மு.க. அரசு முடிவெடுத்துள்ளது
இதற்கான தீர்மானம் புதன்கிழமை மாலை தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பின் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications