வெற்றிக்குப் பாடுபடு உடன்பிறப்பே .. கருணாநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் வெற்றிக்கு தொண்டர்கள் உறுதியுடன் பாடுபட வேண்டும் என்று திமுகதலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. விரைவில் இது முடிவு பெறும். கடந்த திமுகஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பான பணியாற்றி வந்தன.

அதற்கு முட்டுக்கட்டை போட்டு கடந்த நான்கு மாதங்களாக அவற்றை சரியான முறையில் இயங்க விடாமல் இந்த ஆட்சியாளர்கள் செய்துவருவதை மக்கள் பார்த்து வருகிறார்கள்.

அதிகாரிகளும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக எந்தவித ஒத்துழைப்பையும் கொடுக்காமல், நாற்காலி வீச்சு, நரகல் நடைப் பேச்சு,குடுமிப்பிடிச் சண்டை என தினசரி உள்ளாட்சி அமைப்புகளை இயங்க விடாமல் செய்வது அதிமுகவினரும், அவர்களதுகூட்டணியினரும்தான் என்பதை தினசரி செய்தித் தாள்களில் மக்கள் பார்த்தபடி இருக்கின்றனர்.

மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் காட்டுமிராண்டித்தனக் கூத்து நடத்தி வருபவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய நேரம்வந்து விட்டது. அதற்குரிய சரியான இடம் உள்ளாட்சி தேர்தல். இந்தத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் அமோக வெற்றிபெற, அந்த வெற்றிக்காக அடலேறு என செயல்படப் புறப்படுக என்று நமது அணியினரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்கருணாநிதி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற