ஆப்கானுடன் வர்த்தக போக்குவரத்து நிறுத்தம்: பணிகிறது பாகிஸ்தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெஷாவர்:

ஆப்கானிஸ்தானுடன் அனைத்துவிதமான வர்த்தகப் போக்குவரத்தையும் பாகிஸ்தான் திங்கள்கிழமை திடீரெனநிறுத்தியது. உணவுப் பொருள்களை மட்டும் ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்ப அனுமதித்துள்ளது.

அமெரிக்க நெருக்குதலையடுத்து பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எல்லையை உடனடியாக மூடவேண்டும் என்பது அமெரிக்கா விதித்த முதல் நிபந்தனையாகும்.

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள முகாம்களில் வசிக்கும் 12 லட்சம் அகதிகளைக் கண்காணிக்க கூடுதல்படைகளையும் அனுப்பியுள்ளது.

தோக்ரம் எல்லைப் பகுதியின் கண்காணிப்பு அதிகாரியான பரூக் ஷா கூறுகையில், பாகிஸ்தானுக்குள் நுழையஆயிரக்கணக்கான அகதிகள் முயன்று வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டுவிட்டது. இங்கிருந்துஉணவு தவிர வேறெதையும் அனுப்ப அனுமதிக்கப்படவில்லை.

அதே போல முகாம்களைவிட்டு அகதிகள் தேவையில்லாமல் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தான் தீவிரவாதிகளையும் அப்பாவி ஆப்கானியர்களையும் பிரித்தறிய முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் உதவியுடன் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்த அகதி முகாம்களில்வன்முறை வெடிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற