இந்தியர்கள் என்று சொல்லி ஏமாற்றிய 2 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்

அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லி ஏமாற்ற முயன்றது, விசாரணையின்போது தெரிய வந்தது.

இதுவரை சுமார் 50 பேரைப் அமெரிக்கப் புலனாய்வுத் துறை கைது செய்து விசாரித்து வருகிறது.

டெக்சாஸ் மாநிலம் போர்ட் எர்த் ரயில் நிலையத்தில், அயூப்கான் மற்றும் முகமது ஜாவித் ஆகியோரிடம்விசாரித்தபோது, அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று கூறிக் கொண்டார்கள்.

அவர்களிடம் சுமார் 10,000 அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தன. மேலும் சில ஆயுதங்களையும் அவர்கள்வைத்திருந்தனர்.

மேலும் துருவித் துருவி விசாரித்ததில், அவர்கள் 2 பேரும் இந்தியர்கள் அல்ல என்று தெரிய வந்தது.விசாரணையைத் திசை திருப்புவதற்காக, அவர்கள் தவறான தகவல் கூறினர் என்பதும் தெரிய வந்தது.

அவர்கள் 2 பேரும் மேலும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற