பாகிஸ்தான் அதிபரை வர விடாமல் தடுத்தது சீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்:

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை இப்போதுள்ள சூழ்நிலையில் தனது நாட்டுக்கு வர வேண்டாம் என சீனாகூறிவிட்டது.

பாகிஸ்தானுக்கு பிரச்சனை வரும்போதெல்லாம் அந் நாட்டு அதிபர்கள் ஓடுவது சீனாவுதக்குத் தான்.

இப்போது ஆப்கானிஸ்தான் பிரச்சனை உச்சத்தில் உள்ள நிலையில் சீனாவின் ஆதரவைப் பெறுவதற்காக அங்குசெல்ல பர்வேஸ் முஷாரப் திட்டமிட்டிருந்தார். சில நாட்களில் முஷாரப் அங்கு செல்வார் என்று பாகிஸ்தான்வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறியிருந்தார்.

ஆனால், தனது நாட்டிந் ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பிரச்சனைகளை சந்தித்து வரும் சீனா,இப்போது பாகிஸ்தானுக்கு எந்தவிதத்திலும் உதவ முடியாது என்று கூறிவிட்டது.

தனது நாட்டுக்கு வரவிருந்த முஷாரபை தடுத்துவிட்ட சீனா பின்லேடன் பிரச்சனை குறித்து விவாதிக்க ஒரு துணைநிலை அமைச்சரை மட்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கிட்டத்தட்ட அதிகாரி நிலையில் இருக்கும் வெளியுறவுத்துறை துணைநிலை அமைச்சர் வாங் யீ இஸ்லாமாபாத்துக்குஅனுப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து சீன வெளியுவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷூ பாங்ஷாவ் கூறுகையில், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன்பேரில் அமைச்சரை அனுப்பி வைத்துள்ளோம். சீனாவும் பாகிஸ்தானும் மிக நெருங்கிய நட்புநாடுகள். ஆனால், பர்வேஸ் முஷாரப் சீனா வருவது குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றார்.

இந்த நேரத்தில் முஷாரபை சீனாவுக்கு வரவழைத்து உலகின் வெறுப்புப் பார்வை தன் மீது விழுவதை சீனாவிரும்பவில்லை. இதையடுத்து அவரை வரவிடாமல் தடுத்துவிட்டதாக பல நாட்டு தூதரக அதிகாரிகள்நம்புகின்றனர். அதே நேரத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா நெருக்கி வருவதைக் கண்டிப்பது போல ஒருஅறிவிப்பையும் சீனா வெளியிட்டது.

அதில், ஆப்கானிஸ்தானைத் தாக்கும் முன் ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியை அமெரிக்கா பெற வேண்டும்என சீனா கூறியுள்ளது.

ஆப்கான்- சீன எல்லை மூடல்:

இதற்கிடையே ஆப்கானிஸ்தானுடனான தனது எல்லையை சீனா மூடியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற