அவர்கள் குற்றவாளிகள் அல்ல... பிடிபட்ட 2 இந்தியர்களின் குடும்பங்கள் மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

அமெரிக்காவில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 2 இந்தியர்கள் குற்றவாளிகளே அல்லஎன்று ஹைதராபாத்தில் உள்ள அவர்களுடைய குடும்பங்கள் மறுத்துள்ளன.

முகம்மது ஜாவித் அஸ்மத் மற்றும் அயூப் அலிகான் என்ற அந்த 2 பேரையும், எப்.பி.ஐ. கைது செய்தவுடன்,சோகத்தில் ஆழ்ந்துள்ளன அவர்களுடைய குடும்பங்கள்.

"என் மகன் ஒரு அப்பாவி. அவன் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணத்தில்தான் எங்கள் குடும்பமே ஓடுகிறது"என்று கூறினார் அலிகானின் 65 வயது தாய் கல் பேகம்.

மேலும், "அவன் 9 ஆண்டுகளாக ஜாவித்துடன் நியூ ஜெர்சியில் இருந்துள்ளான். அங்கு அவனுடைய வேலை போனபிறகு, வேறு வேலை தேடித்தான் அவன் டெக்சாஸ் செல்லப் போவதாக, சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்தொலைபேசியில் என்னிடம் கூறினான்" என்றும் பேகம் கூறினார்.

ஜாவித்துடைய கர்ப்பிணி மனைவியோ, "அவர் ஒரு அப்பாவி. தன் மேல் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்துஅவர் நிச்சயம் வெளியேறி வருவார்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற