தலிபான்-மத குருமார்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

நாடு முழுவதிலும் உள்ள உலமாக்கள் (மத குருக்கள்) காபூல் வந்து சேரவே 2 முதல் 3 நாட்கள் ஆகிவிடும் என்று தெரிகிறது.இதையடுத்து இன்று நடப்பதாக இருந்த தலிபான்-மதகுருமார்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலை எதிர் கொண்டுள்ள தாலிபான்கள் பின்லேடனை என்ன செய்வது என்பது குறித்து உலமாக்களுடனும்ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடப்பதாக இருந்த அந்தக் கூட்டம் ஆப்கானிஸ்தானின் போக்குவரத்து வசதிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 மாகாணங்களில் இருந்து உலமாக்கள் காபூல் வந்து சேரவே குறைந்தபட்சம் 2 நாட்கள் ஆகிவிடும்என்று கூறப்படுகிறது.

பல மாகாணங்களின் உள் பகுதிகளில் சாலையே கிடையாது. அங்கிருந்து குதிரைகளில் வந்து சிறிய நகர்களை அடைந்து பின்னர்காபூலுக்கு இந்த உலமாக்கள் பஸ் பிடிக்க வேண்டும். அவர் மலைகளைக் கடந்து காபூல் வர தாமதமாகிக் கொண்டுள்ளது.

ஆட்கள் வந்து சேராததால் கூட்டத்தை தள்ளி வைத்துள்ளோம் என தலிபான் கல்வி அமைச்சர் அமிர் கான் முத்தாஹி ஏ.எப்.பி.செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட உலமாக்கள் ஏற்கனவே காபூல் வந்துவிட்டனர் என அந் நகர மேயர் முல்லா ஹம்துல்லாநோமானி கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற