இந்தியாவின் மெளன அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒருங்கிணைப்பு நாளையொட்டி, இந்தியா முழுவதும் இன்று காலை 10.30 மணிக்கு2-நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று பயங்கரவாத எதிர்ப்பு தேசியஒருங்கிணைப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இதையடுத்து, இந்திய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் காலை சரியாக 10.30 மணிக்கு மெளனஅஞ்சலி செலுத்தினார்கள். 2 நிமிடத்திற்கு அவர்கள் மெளனமாக இருந்தனர்.

பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மெளன அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், மாநில முதல்வர்களும், அமைச்சர்களும், மாவட்ட கலெக்டர்களும் மெளன அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இந்தியா முழுவதிலுமுள்ள அரசு அலுவலகங்களிலும், சில தனியார் நிறுவனங்களிலும் பணி புரிபவர்கள்தங்கள் மெளன அஞ்சலியைச் செலுத்தினர்.

அமெரிக்காவிலும் இந்தியர்கள் மெளன அஞ்சலி

பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒருங்கிணைப்பு நாள் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்திலும்கடைப்பிடிக்கப்பட்டது.

அங்குள்ள மகாத்மா காந்தி நினைவகம் முன்பாக, சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.

அமெரிக்க இந்தியர்கள் பலர் அங்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற