பாகிஸ்தான் அணு ஆயுத மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தவிருக்கும் போரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது தாக்குதல்நடத்தப்பட்டாலும் அங்குள்ள அணு உலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அந் நாட்டு அணு விஞ்ஞானிஅப்துல் காதிர் கான் கூறினார்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனைஉயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுக்க உள்ளது.

இதற்காக பாகிஸ்தானின் விமானத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த உள்ளது. இதனால் பாகிஸ்தான் மீதுதாக்குதல் நடத்த தலிபான்களுக்கு ஆதரவான தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். தேவைப்பட்டால் தலிபான்களேபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவார்கள் எனக் கருதப்படுகிறது.

அதே போல எதிர்காலத்தில் தீவிரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகபாகிஸ்தானின் அணுக் கரு மையங்கள் மீது அமெரிக்காவே கூட தாக்குதல் நடத்லாம் என ஈரான் செய்திநிறுவனமான இர்னா செய்தி வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் காதிர் கான் கூறுகையில், பொதுமக்கள் இதுபோன்ற செய்திகளால் அச்சமடைய வேண்டாம்.போரின்போது பாகிஸ்தானில் உள்ள அணுக்கரு மையங்கள் பாதிப்புக்குள்ளாகலாம் என்று கூறப்படுவதுதவறானது.

அந்த மையங்கள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணமாக ராணுவத்தினருடன் சேர்ந்துநூற்றுக்கணக்கான ரகசிய ஏஜெண்டுகளும் அணுக் கரு மையங்களை பாதுகாத்து வருகின்றனர்.

அவர்களைத் தாண்டி சிறு கல்கூட உள்ளே நுழைய முடியாது என்றார்.

ஆப்கான் பிரச்சனையையடுத்து தனது அணு உலைகளுக்கும் அணு ஆயுத சோதனை மையங்களுக்கும் அணுஆயுதங்களுக்கும் பாதுகாப்பை பாகிஸ்தான் மிக பலப்படுத்தியுள்ளது. ஆயுதங்கள் அனைத்தும் ரகசியஇடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றைத் தயாரிப்பது தொடர்பான விவரங்கள்தீவிரவாதிகளின் கைகளுக்குக் சென்றுவிடக் கூடாது என பாகிஸ்தானை அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற