முஷாரப் உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு அதிகரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்காவுக்குப் பணிவதா இல்லை மதவாதிகளுக்குப் பணிவதா என குழம்பியபாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அமெரிக்காவுக்குப் பணிந்துள்ளார்.

தனது வாழ்வில் அவர் எடுத்துள்ள மிகப் பெரிய ரிஸ்க் இது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாகிஸ்தானின் மதரஸாக்களில் (மதப் பள்ளிகள்) உருவாக்கப்பட்ட தலிபான்களுக்கு அந் நாட்டில் தீவிர ஆதரவுஉண்டு. நாடு முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகளும், மதவாத அரசியல் கட்சிகளும் தலிபான்களையும்அவர்களுக்கு உதவும் பின் லேடனையும் ஹீரோக்களாகவே பார்க்கின்றனர்.

குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்திலேயே தலிபான் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். தலிபான்களுக்குபோர் பயிற்சி அளித்ததும் பாகிஸ்தான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் பின் லேடன் விவகாரத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு தலிபான்களை எதிர்ப்பதைராணுவத்திலேயே ஒரு பிரிவினர் விரும்பவில்லை. பாகிஸ்தான் ராணுவமே ஜிகாத் (புனிதப் போர்) ஆதரவுப்பிரிவு ஜிகாத் எதிர்ப்புப் பிரிவு என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.

பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின் செயல் ஜிகாத் ஆதரவு ராணுவத்தினரைகடுப்பளித்துள்ளது.

ராணுவ கமாண்டர்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது என்பது பாகிஸ்தானில் மிகச் சாதாரணமான ஒன்று. முஷாரப்பே கூடநவாஸ் ஷெரீபை கவிழ்த்துவிட்டுத் தான் ஆட்சியைப் பிடித்தார். ஒரு நாள் திடீரென ஜனாதிபதியாகவும்அறிவித்துக் கொண்டார்.

ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜியா-உல்-ஹக்கை பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்த அவருக்கு எதிரானகமாண்டர்கள் தான் விமானத்தில் குண்டு வைத்துக் கொன்றனர்.

இப்போது ராணுவத்தில் உள்ள தலிபான் ஆதரவு கமாண்டர்களையும் மீறித் தான் அமெரிக்கவுக்கு உதவ முஷாரப்முடிவெடுத்துள்ளார். பின்லேடன் தாக்கப்பட்டால் தன்னுடைய ஆட்சியையும் ஒரு நாள் தலிபான்களும் அவர்களதுஆதரவு ராணுவத்தினரும் சேர்ந்து கவிழ்க்க முயல்வார்கள் என்பதை முஷாரப் உணர்ந்தே இருக்கிறார்.

தன் ஆட்சி ஒரு நாள் ஜிகாத் ஆதரவு ராணுவத்தினரால் தான் கவிழ்க்கப்படும் என்று கருதும் முஷாரப் ஆட்சிக்குவந்தததில் இருந்தே இவர்களைத் தான் தனது முதல் எதிரிகளாக கருதி வருகிறார். ஜிகாத் அமைப்பினர் மன நிலைசரியில்லாதவர்கள் என்று கூட ஒருமுறை பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போது அவர்களை தூண்டிவிடும் வகையில் முஷாரப் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். உடலைமறைக்கும் ஆடையான புர்கா அணியாத இவரது குடும்பப் பெண்களை ஜிகாத் அமைப்பினர் பலமுறை கண்டித்துப்பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஜிகாத் ஆதரவுப் படையினரை எதிர்க்க அமெரிக்காவின் உதவி தனக்குக் கிடைத்துள்ளதாக முஷாரப்கருதுகிறார்.

ஆனால், அவருக்கு பாகிஸ்தான் பொது மக்களிடம் கூட ஆதரவு கிடைக்கவில்லை. தலிபான்களையும் பின்லேடனையும் ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், மதவாதக் கட்சிகளின் ஆதரவும் அவருக்குக் கிடைக்கவில்லை.

38 மதவாதக் கட்சிகளைக் கொண்ட வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் முஷாரபுக்கு கடும் கண்டனம்தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்காவை ஆதரிக்கும் தனது முடிவுக்கு உள்நாட்டில் ஆதரவே இல்லை என்பதை முஷாரப்உணர்ந்திருக்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் தலிபான்களை ஆதரித்து அமெரிக்காவையும் உலகின் எல்லாநாடுகளையும் எதிரிகளாக்கிக் கொள்ளும் வலிமை பாகிஸ்தானுக்கு இல்லை.

இதனால் வேறு வழியில்லாமல் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

முஷாரபுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு:

இந் நிலையில் முஷாரபுக்கும் ஜனாதிபதி மாளிகைக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ய

தற்கொலைப் படையினரின் தாக்குதல் நடக்கலாம் என்ற நிலையில் மிகத் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற