திமுக பேரணி கலவரம்: ஆளுநரைச் சந்தித்தது பத்திரிக்கையாளர் குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் நடத் திமுக பேரணியில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டது குறித்துஅறிக்கை சமர்ப்பிக்க, பத்திரிக்கையாளர்கள் குழு ஒன்று, இன்று தமிழக ஆளுநர் ரங்கராஜனைச் சந்தித்தது.

சென்னையில் ஆகஸ்ட் 12ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது போலீசார் அத்துமீறிநடந்துகொண்டதாகக் கூறி, திமுக சார்பில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியின் முடிவில்போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையில் பெரும் கலவரம் வெடித்தது.

இந்தக் கலவரத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்ட்டு, அவர்கள் வைத்திருந்த படச்சுருள், கேமரா போன்றவற்றைப்போலீசார் பறித்துக்கொண்டதாக பத்திரிக்கையாளர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து நடந்த உண்மைகளை அறிய பாலசுப்ரமணியம் தலைமையில் ஒருபத்திரிக்கையாளர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் சென்னை பிரஸ் கிளப் தலைவர் பொன் தனசேகரன், மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு செயலாளர்சுப்ரமணியம், அருண்ராம்(இன்டியா டுடே), ரேவதி(பயனீர்), பக்வான்சிங்(டெக்கான் க்ரோனிகல்) மற்றும் ராமசாமி(பி.டி.ஐ) ஆகிய பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள் அனைவரும் பேரணிக் கலவரத்தில் நடந்த உண்மைகளை ஆராய்ந்து ஒரு அறிக்கை தயார் செய்தனர்.அந்த அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பிக்க இன்று அவரைச் சந்தித்தனர்.

ஆளுநரைச் சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய பாலசுப்ரமணியம், "எங்கள் அறிக்கையைப் படித்துப் பார்த்து,அந்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதன் படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கவர்னர் உறுதிஅளித்துள்ளார்" என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற