பின்லேடனை ஒப்படைப்பார்களா?: தலிபான்கள் இன்று முக்கிய ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்து விவாதிக்க தலிபான் தீவிரவாதிகளின் உயர் மட்டக் குழுஇன்று கூடுகிறது.

பின் லேடனை ஒப்படைக்க அமெரிக்கா விதித்த கெடுவான 72 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 40 மணி நேரம்கழிந்துவிட்டது.

அமெரிக்காவின் நிபந்தனை குறித்து எடுத்துக் கூறி ஆப்கானிஸ்தானைக் காப்பாற்ற பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள்பலனளிக்கவில்லை. லேடனை ஒப்படைக்கக் கோரி பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் தலைமையிலான குழுதலிபான் தலைவருடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்துவிட்டது.

மீண்டும் தலிபான் தலைவர்களுடன் பேச பாகிஸ்தான் முயன்று வருகிறது.

அதே நேரத்தில் தங்களுக்குள் கூடி உயர் மட்ட ஆலோசனை நடத்த தலிபான் ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.நாடு முழுவதும் நிலை கொண்டுள்ள தலிபான் கமாண்டர்கள், மற்றும் தலிபானின் அரசியல் ஆலோசகர்கள், மதத்தலைவர்களள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெற உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் தலைநகரான காபூலில் நடக்குமா அல்லது தலிபான்களின் ஆட்சியாளர் முகம்மத் ஒமர்தங்கியுள்ள காண்டஹாரில் நடக்குமா என்று தெரியவில்லை.

பின் லேடனை ஒப்படைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என தலிபான் வெளியில் கூறினாலும், போருக்குத்தயாராவது குறித்துத் தான் முக்கியமாகப் பேசப்படும் என்று தெரிகிறது.

எந்த நிலையிலும் பின் லேடனை ஒப்படைக்க தலிபான் தயாராக இல்லை. முகம்மத் ஒமரின் மகளை ஒசாமா பின் லேடன்மணமுடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின் லேடனை ஒப்படைக்க வேண்டுமானால் அவருக்கும் அமெரிக்கத் தாக்குதலுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கும்சாட்சியத்தை அமெரிக்கா தர வேண்டும் என தலிபான் கூறி வருகிறது.

இந் நிலையில் ஒசாமா பின் லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ அமெரிக்கா பிடிக்கும் என அதிபர் புஷ்அறிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற