விரைவில் லண்டனில் தமிழக சுற்றுலா தகவல் மையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தமிழகத்திலுள்ள சுற்றுலா ஸ்தலங்களைப் பற்றி வெளிநாட்டினர் அறிந்து கொள்வதற்காக, உலகெங்கிலும் உள்ளமுக்கிய நகரங்களில் தமிழக சுற்றுலா தகவல் மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்பி. சரோஜா கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

உலகெங்கிலும் உள்ள மக்களை, தமிழகம் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த மையங்கள் நிறுவப்படவுள்ளன.

அந்த வகையில், வெகு விரைவில் லண்டனில் ஒரு தமிழக சுற்றுலா தகவல் மையம் நிறுவப்பட இருக்கிறது.இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக, தமிழக சுற்றுலாத் துறை அதிகாரிகள் லண்டன்செல்லவுள்ளனர்.

தமிழகத்திலுள்ள முக்கிய பக்தி ஸ்தலங்களான பழனி, திருவண்ணாமலை, நாகூர் மற்றும் வேளாங்கண்ணி போன்றநகரங்களில், அனைத்து வசதிகளையும் கொண்ட ஓட்டல்களை தமிழக சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் கட்டவுள்ளது.

இந்த ஆண்டு சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக, ரூ.17.5 கோடியை ஒதுக்கியுள்ளது அதிமுக அரசு. ஆனால் முந்தையதிமுக அரசோ ரூ.5.5 கோடியை மட்டுமே ஒதுக்கியிருந்தது என்றார் சரோஜா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற