1,000 மத குருமார்களுடன் தலிபான் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு மத குருமார்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட உலமாக்களை (மத குருமார்கள்) காபூலுக்கு வருமாறு தலிபான்ஆட்சியாளரான முல்லா முகம்மத் ஒமர் அழைப்பு விடுத்துள்ளார் என தலிபான்களின் அதிகாரப்பூர்வ ரேடியோவான ரேடியோஷரியத் கூறியுள்ளது.

இதையடுத்து உலமாக்கள் அனைவரும் காபூலில் குவிந்து வருகின்றனர்.

பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட தலிபான்கள் தயாராக இருந்தாலும் உலமாக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இதையடுத்து இவர்களுடன் நேரில் ஆலோசனை நடத்த தலிபான் அரசு திட்டமிட்டுள்ளது.

உலமாக்கள் என்ன நடவடிக்கை எடுக்கச் சொல்லி பத்வா (உத்தரவு) பிறப்பிக்கிறார்களோ அதை தலிபான் நிறைவேற்றும் எனதலிபான் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹய் முடாமீன் கூறினார். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் உலமாக்களின் உத்தரவைதலிபான் கேட்டுப் பெற்றுள்ளது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற