பயங்கர போர் ஒத்திகையில் ஆப்கானிஸ்தான் ராணுவம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காண்டஹார்:

அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிரான பயங்கர போர் ஒத்திகையை தலிபான் ராணுவம் துவங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் அவசர நிலையைப் பிரகனடப்படுத்தியுள்ள தலிபான் மதப் பள்ளிகளை மூடிவிட்டது.அந்தப் பள்ளி மாணவர்களை போர் பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது.

இது குறித்து காண்டஹார் மண்டல கவர்னர் மெளலவி லுகம்மத் ஹசன் கூறுகையில், தலிபான் ராணுவம் மிகப்பெரிய போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. விமானப் படையும் இந்தப் பயிற்சிகளில் பங்கெடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் எப்போதுமே அடிமைத்தனத்தை விரும்பியதில்லை. சோவியத் யூனியன் எங்களிடம்பட்டபாட்டை அமெரிக்கா மனதில் கொள்ள வேண்டும்.

அமெரிக்கர்களுக்கு பாகிஸ்தான் உதவாமல் இருப்பது அந்த நாட்டுக்கு நல்லது. இல்லாவிட்டால் அங்கு மிகமோசமான சம்பவங்கள் நடக்கும். பாகிஸ்தானை நிச்சயம் தாக்குவோம் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற