அமெரிக்காவிற்கு இந்தியா உதவ கூடாது - அணு ஆயுத எதிர்ப்பு இயக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுக்கத் தயாராக உள்ள அமெரிக்கா எடுக்கும் தன்னிச்சையானநடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவுகொடுக்க வேண்டாம் என்று அணு ஆயுத எதிர்ப்பு இயக்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இது குறித்து இந்த இயக்கத்தின் சார்பில் இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் கடிதத்தில்கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்காவில் தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி, அவற்றைக்கொண்டேபெருமளவு உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் மூலம் எந்தவித நவீனத்தொழில்நுட்பமும் இல்லாமலே பெரிய அளவில் உயிர்ச்சேதத்தைஏற்படுத்த முடியும் என்பதை உலகம் உணர்ந்துள்ளது.

அடப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மதவாதக்குழுக்களாக இருந்தாலும், ஒரு நாடாக இருந்தாலும்அதை ஏற்றுக்கொள்ெள முடியாது.

ஆனால் தீவிரவாதத்தை ஒழிக்க மீண்டும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்ற முடிவை நாங்கள்எதிர்க்கிறோம்.

எனவேதான் அணுஆயுத ஒழிப்பை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

பேச்சுவார்த்தைள் மூலம் இதற்கு தீர்வுகாண முயல்வதே நீண்டகால அமைதிக்கு வழிவகுக்கும் என்ற கருத்தில்நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

மேலும் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடருமுன் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலைப்பெறவேண்டும்.

அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாகச் செயல்படுமானல், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இந்தியாபோன்ற நடுநிலைநாடுகள் ஆதரவு தரக்கூடாது.

இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற