பாகிஸ்தான் விமானத் தளங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களைப் பயன்படுத்தப் போவதாகஅமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்காக பாகிஸ்தானின் அனுமதியையும் அமெரிக்க ராணுவம் கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பெஷாவர், குயேட்டா ஆகிய நகர்களில் உள்ள விமானத் தளங்களை பயன்படுத்தஅமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைத் தாக்க தனது வான்பகுதியை வேண்டுமானால் பயன்படுத்தலாம் என்று பாகிஸ்தான்கூறியுள்ளது. ஆனால், விமானப் படைத் தளங்களை அனுமதிப்பது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

இந் நிலையில் விமானப் படைத் தளங்களை பயன்படுத்தப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஏற்கனவே தனது50 மெரைன் படையினரை பாகிஸ்தான் விமானத் தளங்களில் அமெரிக்கா இறக்கிவிட்டுள்ளது.

பஹ்ரைன், பாகிஸ்தான் கடல் பகுதி, அரேபியக் கடலில் உள்ள மேக்ரன் ஆகிய இடங்களில் உள்ளஅமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்டு வரும் ராணுவ விமானங்கள்ஆப்கானிஸ்தானுக்குள் நுழையும் முன் இந்த விமானத் தளங்களில் இறங்கி எரிபொருள் நிரப்பிச் செல்லும் என்றுஅமெரிக்கா கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற