இந்தியாவில் உள்ள ஆப்கானியர்கள் குடியுரிமையை புதுப்பிக்க உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவில் தங்கியிருக்கும் அஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் மீண்டும் தங்கள் குடியுரிமையைப் பதிவுசெய்யவேண்டும் என்ற இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதுவரை உளவுப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த குடியுரிமை வாரியம், உள்துறை அமைச்சகத்தின்கட்டுப்பாட்டில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும்வகையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர்தொடுக்கும் நிலையில் உள்ளது.

இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவலாம் என்றுசந்தேகிக்கப்டுகிறது.

இதைத்தடுக்க இந்தியாவில் தங்கியிருக்கும்ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் மீண்டும் தங்கள் குடியுரிமையைப்பதிவுசெய்யவேண்டும்.

ஏற்கனவே அவர்கள் பதிவுசெய்திருந்தாலும், மீண்டும் அதைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

மேலும் குடியுரிமை காலாவதி ஆகியிருந்தாலும், அதற்கான அபராதத்தொகை எதுவும் செலுத்தாமல் மீண்டும்அவர்கள் தங்கள் குடியுரிமையைப் பதிவுசெய்துகொள்ளலாம் என்று இந்திய உள்துறை அமைச்சகம்அறிவித்துள்ளது.

கடந்த 1980ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் இனக்கலவரம் நடந்தது. அந்தக் கலவரத்தில் இந்துக்கள்,சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த மக்களின் எண்ணிக்கை அதிகமானது.

இப்போது அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் அங்கிருக்கும் பலர் இந்தியாவுக்குள் நுழையலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அவர்களின்குடியுரிமையை முறையாகப் பதிவுசெய்துகொள்ளவேண்டும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற