முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஜெ. முடிவு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தான் விரைவில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும். அடுத்த 6 மாத காலத்திற்கு தான் முதல்வராக நியமிப்பவரை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதாஅமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. அப்போது காவிரி பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன் பின் ஜெயலலிதா அமைச்சர்களிடம் பேசும் போது,

அனைத்து எம்.எல்.ஏக்களும் உள்ளாட்சி தேர்தல்களில் முழுகவனம் செலுத்த வேண்டும். தேவையின்றி அமைச்சர்கள் யாரும் சென்னைக்கு வரக்கூடாது. முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட வேண்டிய அவசியம் இருந்தால் மட்டுமே அமைச்சர்கள் சென்னைக்கு வர வேண்டும். எல்லா எம்.எல்,ஏக்களும், அமைச்சர்களும் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை அவரவர் தொகுதியில் தங்கியிருந்து தேர்தல் பணியை கவனிக்க வேண்டும்.

என் பதவி பறிப்பு குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம். நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவேன். நான் விரைவில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

அடுத்த 6 மாத காலத்திற்கு வேறு ஒருவர்தான் முதல்வராக இருப்பார். நான் யாரை முதல்வராக நியமிக்கிறேனோ அவரை நீங்கள் ஏற்று செயல்படவேண்டும் என்றார்.

முதல்வராக ஜெயலலிதா யாரை நியமித்தாலும் அவரை முதல்வராக ஏற்றுக் கொள்வது என்று அமைச்சர்கள் முழுமனதாக முடிவெடுத்தனர். ஆனாலும் ஜெயலலிதா ராஜினாமா செய்தால் தாங்களும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியநிலை வரும் என்ற வருத்தமும் அவர்களிடையே உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற