வளைகுடாவுக்குப் புறப்பட்டது அமெரிக்க போர்க் கப்பல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வல்ட் வளைகுடா நோக்கி இன்று புறப்பட்டது.

விர்ஜினியாவில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் 11 போர்க் கப்பல்களைக் கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கி வருகிறது.

மேலும் இரு விமானம் தாங்கிக் கப்பல்களான யு.எஸ்.எஸ். என்டர்பிரைஸ் மற்றும் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் ஆகியவைஏற்கனவே இந்தியப் பெருங்கடல் பகுதியில் தான் உள்ளன.

இதன் மூலம் மூன்று மாபெரும் கப்பல்களும் அவற்றின் துணைப் போர்க் கப்பல்களும் ஆப்கானிஸ்தானைத் தாக்க தயார் நிலையில்உள்ளன. இதில் இருந்து விமானங்களை அனுப்பி ஆபகானிஸ்தானத் தாக்க முடிவது தவிர விமானங்களில் இருந்துஏவுகணைகளையும் செலுத்த முடியும்.

3 கப்பல்களிலும் துணைக் கப்பல்களிலும் சேர்த்து 15,000 வீரர்கள் உள்ளனர்.

இப்போது வளைகுடாவுக்கு வரும் ரூஸ்வல்ட் கப்பலுடன் ஏவுகணைகள் செலுத்தும் 3 கப்பல்களும், நீர்மூழ்கிகளைத் தாக்கும் 2கப்பல்களும் வருகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற