உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திட்டமிட்டபடி வியாழக்கிழமை தொடங்காது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை சரி பார்க்காமல் தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தஉத்தரவிட்டுள்ளதாகவும், எனவே, இதனால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரி செய்யாமல் தேர்தல் நடத்தக்கூடாது என உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பொன்னுச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, சிவசுப்ரமணியம் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வியாழக்கிழமை வரைதள்ளிவைக்க முடியுமா என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் சந்திரனிடம் கேட்டார்.

அதற்கு சந்திரன், வியாழக்கிழமை வரை அறிவிப்பு வெளியிடுவதை தள்ளிவைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம்கேட்டுக் கொள்வதாக உறுதியளித்தார்.

இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற