திமுக குழுவினருடன் பா.மக. தலைவர்கள் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சிக் குழுவினர்திமுக குழுவினருடன் புதன்கிழமை பேச்சு நடத்தினர்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வந்தது. தற்போது அங்கிருந்துவெளியேறி விட்டது. திமுக கூட்டணியில் சேர முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்வதற்காக பா.மக. குழுவினர்அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர்.அக்குழுவில் ஐ.கணேசன், மூர்த்தி, என்.டி.சண்முகம், பு.தா.இளங்கோவன் ஆகியோர் இருந்தனர்.

திமுக சார்பில் கோ.சி.மணி, பொன்முடி, ஏ.எல்.சுப்ரமணியம், கோவை ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இரு தரப்பினரும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து பேசினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியில் வந்த ஜி.கே.மணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, திருப்திகரமானபேச்சுவார்த்தையாக இருந்தது. சுமூகமாக இருந்தது என்றார்.

ஏற்கனவே, பொன்முடியும், கோ.சி.மணியும் டாக்டர் ராமதாசை சந்தித்துப் பேசியுள்ள நிலையில், சில நாட்களில்உடன்பாடு எட்டப்பட்டு விடும் என்று தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற