தலிபானுடன் உறவு முறிந்தது- யு.ஏ.இ. அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அபுதாபி:

ஆப்கனில் ஆளும் தலிபன் அரசுடனான ராஜாங்க உறவுகளை முறித்துக் கொள்வதாகஐக்கிய அரபு நாடுகள்(யு.ஏ.இ) அறிவித்துள்ளது.

கடந்த 11ம் தேதி நியூயார்க் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சர்வதேசதீவிரவாதி ஒசாமா பின் லேடன்தான் காரணம் என்று அமெரிக்கா உறுதிபடகூறியுள்ளது.

பின் லேடனுக்கு அடைக்கலம் அளித்திருக்கும் ஆப்கன், பின் லேடனை தன்னிடம்ஒப்படைக்குமாறு அமெரிக்கா அங்கு ஆளும் தலிபானை கேட்டுக் கொண்டது.ஆனால் அதற்கு தலிபான் மறுத்துவிட்டதால் அமெரிக்கா தலிபான் மீது போர்தொடுக்க முடிவு செய்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தவிருக்கும் போருக்கு உலக நாடுகள்ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஆப்கனில் ஆளும் தலிபான் அரசுடனான ராஜாங்க உறவுகளை முறித்துக்கொள்வதாக ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சரவை செய்திதொடர்பாளர் கூறுகையில்,

ஐக்கிய அரபு நாடுகள் ஆப்கனின் ஆளும் தலிபான் அரசுடனான உறவுகளை முறித்துக்கொள்வது என்று முடிவு செய்துள்ளது. இந்த முடிவு இன்று முதல் (சனிக்கிழமை) அமலுக்கு வருகிறது என்றார்.

சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மட்டும்தான் ஆப்கனின்ஆளும் தலிபானுடன் உறவு கொண்டிருந்தன.

தற்போது ஐக்கிய அரபு அரசுகள் தலிபானுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளதால்,சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் மட்டுமே தலிபனுடன் உறவு கொண்டுள்ளஇரண்டு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐக்கிய அரபு நாடுகள் எங்களுடனான உறவுகளை முறித்துக் கொள்வதுகுறித்து எங்களுக்கு எந்த விதமான தகவலும் வரவில்லை என்று தலிபான் அதிகாரிகள்கூறினர்.

இது குறித்து தலிபனின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாகில் அகமது முடாவாகேல்கான்டகாரிலிருந்து ஏ.எப்.பி.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ,

ஐக்கிய அரபு நாடுகள் எங்கடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக எந்த விதமானதகவலும் வராததால் இது குறித்து எந்த விதமான கருத்தும் கூறவிரும்பவில்லைஎன்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற