கடத்தப்பட்ட காசிமேடு மீனவர்கள் மீட்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திர மாநில மீனவர்களால் சில நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டனர். அவர்களை தமிழக போலீஸ் மற்றும் அதிகாரிகள் குழு பணம் ஏதும் கொடுக்காமல் பத்திரமாக மீட்டு வந்தது.

சென்னை காசிமேடு, ராயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்களை ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த சமூக விரோதிகள், மீனவர்கள் கடத்திச் சென்று விட்டு பணம் கொடுத்தால் மட்டுமே விடுவோம் என்று மிரட்டி வருவது வழக்கமாகி விட்டது. அவர்கள்கடத்திச் செல்வதும், நம்ம ஊர் மீனவர்கள் பணம் கொடுத்து அவர்களை மீட்டு வருவதும் தினசரி சம்பவங்களாகிவிட்டன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக அரசுத் தரப்பில் இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. காரணம், மீனவர்கள் சங்கத்தினர் போலீஸில் புகார் கொடுப்பதில்லை. அரசிடம் முறையிடுவதில்லை. இதன் காரணமாக அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

கடந்த முறை மீனவர்கள் தொடர்ந்து கடத்தப்பட்ட போது மட்டுமே போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதேபோல சில நாட்களுக்கு முன்பும் 45 மீனவர்களை ஆந்திரா சமூக விரோதிகள் கடத்திச் சென்று விட்டனர். இதையடுத்து ராயபுரம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக மீன்வளத்துறை இணை இயக்குநர் தில்லை சேகரன், ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் இன்பசேகரன்,இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் மீனவர் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு ஆந்திரா சென்று அங்கு பேச்சுவார்த்தைநடத்தியது.

பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழக மீனவர்களை விடுவிக்க ஆந்திர நபர்கள் சம்மதம் தெரிவித்தனர். இப்போதுதான் பணம் ஏதும்கட்டாமல் மீனவர்கள் மீட்கப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற