பிரபல அதிமுக மேடைப் பாடகர் படுகொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கொள்கை விளக்கப் பாடல்களை பாடுபவரும், பிரபல அதிமுக பிரகருமான தோட்டம் சேகர் சென்னையில் சனிக்கிழமைபடுகொலை செய்யப்பட்டார்.

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட் அருகே உள்ள வைத்தியர் தெருவில் வசித்து வந்தவர் தோட்டம் சேகர். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். அதிமுக மேடைகளில் கட்சிப் பாடல்களைப் பாடி வந்தார். தென் சென்னை மாவட்ட சயலாளராக முன்பு இருந்தவர்.

சேகர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் நேரடியாக சென்று பேசும் அளவுக்கு அதிமுகவில் பிரபலம் ஆனவர். அவ்வளவு செல்வாக்கு மிக்க சேகருக்கு பிற கட்சியினர் மற்றும் வேறு சிலரால் உயிருக்கு ஆபத்து இருந்து வந்ததால் அவருடன்எப்போதுமே பாதுகாப்புக்கு 20 பேருக்கும் குறையாமல் ஆட்கள் இருப்பது வழக்கம்.

சனிக்கிழமை மாலை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று விட்டு வீட்டுக்குத்திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் 6 பேர் மட்டுமே உடன் வந்ததாகத் தெரிகிறது. இவர்கள் பாலாஜி தெரு பகுதியில் வந்தபோது திடீரென பெரும் கும்பல் ஒன்று அவர்களை வழி மறித்தது. காரில் வந்த அவர்கள் சேகரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி நிறுத்தினார்கள்.

பின்னர் திமுதிமுவென இறங்கிய அவர்கள் சேகரை சரமாரியாக வெட்டித் தள்ளினர். நிலைகுலைந்த சேகர் அங்கேயே இறந்தார். சேகரை காப்பாற்ற முயன்ற அவருடைய நண்பர்களையும் அக்கும்பல் சரமாரியாக வெட்டியது. 50-க்கும் மேற்பட்டோர் அந்தக்கும்பலில் இருந்ததாகத் தெரிகிறது.

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சேகரை பின்னர் அவரது நண்பர்களும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது பிணம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தகவல் அறிந்ததும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் மற்றும் அதிமுக பிரகர்கள்மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சேகரின் உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார், கராத்தேதியாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சேகர் கொலையையடுத்து திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. அங்குபதற்றம் நிலவியது.

போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். சேகருடைய ஆட்கள் பழிக்குப் பழி வாங்க முயலலாம் என்று எதிர்பார்ப்பதால் போலீஸார் ஞாயிற்றுக்கிழமையும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

சமீப காலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் திருவல்லிக்கேணி பகுதியில்தான் இந்தக் கொலையும் நடந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற