தனித்துப் போட்டியிடுகிறது காங்கிரஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்த பேச்சு எழுந்தது முதலே காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்றசந்தேகம் கிளம்பியது. மாநிலத் தலைவர் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பதுவிரைவில் தெரிய வரும் என்று கூறி வந்தார். மேலும், கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம் என்றும் அவர்அடிக்கடி கூறி வந்தார்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஜெயலலிதா கூட்டினார். அக்கூட்டத்தில்கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அவர் அழைப்பு விடுக்கவில்லை. இதையடுத்து தனித்துப்போட்டியிடும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. தொடர்ந்து, தனது முதல் கட்ட வேட்பாளர்கள்பட்டியலையும் ஜெயலலிதா வெளியிடவே, காங்கிரஸ் கட்சியை அதிமுக புறக்கணிப்பது தெளிவாகியது.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா கட்சிப் பிரதிநிதியாக சென்னைவந்து காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தஅவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார்.

இந்த பேச்சுக்களின் இறுதியில், திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், காங்கிரஸ்கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும். வெற்றி வாய்ப்புள்ள அனைத்து உள்ளாட்சி இடங்களிலும்போட்டியிடுவோம்.

எங்களது கருத்துக்களுக்கு ஏற்புடைய, மதச்சார்பின்மை மீது நம்பிக்கைக் கொண்ட கட்சிகளுடன் மாவட்டஅளவில் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புதிய கூட்டணியாக காங்கிரஸ் கட்சி செயல்படும் என்றார்.பேட்டியின்போது மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் உடன் இருந்தார்.

அவரிடம், இந்த முடிவு ஏகோபித்த முடிவா என்று கேட்டபோது, நிச்சயமாக இது ஏகோபித்த முடிவுதான். கட்சியின்அனைத்துத் தரப்பினரும் இதற்கு சந்தோஷமாக தங்களது சம்மதத்தைத் தந்தனர் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற