உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வேண்டாம் .. எஸ்.டி.எஸ். யோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தல்களை கட்சி சார்பற்ற முறையில் நடத்த வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுககட்சியின் தலைவர் எஸ்.டி.சோமசுந்தரம் கூறியுள்ளார்.

இந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய எஸ்.டி.சோமசுந்தரம்இதுதொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், செயல் திட்டங்களை நிறைவேற்றக்கூடிய இடம்உள்ளாட்சி அமைப்புகள்தான். அவற்றை நிறைவேற்றுகிறபோது, கட்சிக் கண்ணோட்டம் இருக்கக் கூடாது.அப்போதுதான் சகல பிரிவு மக்களும் பயன் அடைய முடியும்.

தற்போதுள்ள முறையில் கட்சி சார்பாகவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றின் தலைவர்களும்,உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதன் காரணமாக அவர்களது செயல்பாடுகள் கட்சி சார்பாகவே இருக்கிறது. கட்சிக் கண்ணோட்டத்துடனேயேபார்க்கப்படுகிறது. அவர்களது நடவடிக்கைகளை எதிர்த்தரப்பினர் எதிர்ப்பது, தலைவர் படங்களை மாற்றுவது எனமக்களுக்குப் பயனில்லாத செயல்பாடுகளை அதிகம் பார்க்க முடிகிறது.

இந்தத் தேர்தலில் ஆள் பலம், பண பலம், ஊழல் போன்ற ஜனநாயக விரோத சக்திகள்தான் முன்னணியில் உள்ளன.எனவே கட்சி சார்பில் போட்டியிடாமல் இருப்பது ஜனநாயகத்தைக் காக்க உதவும் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற