எப்படி இருக்கிறார் பன்னீர் செல்வம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்னும் பழைய வீட்டிலேயே குடியிருந்து வருகிறார். அவரது வீட்டிற்கு விசேஷ பாதுகாப்பு எதுவும்கொடுக்கப்படவில்லை. இன்னும் ஒரு அமைச்சர் அந்தஸ்திலேயே அவர் உலா வந்து கொண்டிருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து தனக்கு விசுவாசமானபெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வும், வருவாய்த்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தை முதல்ராக்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா முன் கைகட்டி பவ்யமாக நிற்கும் பன்னீர் செல்வம் முதல்வரானது அதிமுகவினரிடையே பெரும் ஆச்சரியத்தைக்கொடுக்கவில்லை. அம்மாவுக்கு முன் சும்மா என்ற நிலையிலான ஒரு நபரே முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று அவர்கள்விரும்பினார்கள். எனவே பன்னீர் செல்வம் முதல்வரானதில் அவர்களுக்கு வருத்தமில்லை.

இந்த நிலையில் இன்னும் ஜெயலலிதாதான் முதல்வராக இருக்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் நிலை இருந்துவருகிறது. முதல்வர் பன்னீர் செல்வம் ஒப்புக்கு மட்டுமே முதல்வராக இருக்கிறார். அவர் அலுவலகத்தில் அமர்ந்து இருக்கிறாரேதவிர அரசு பைல்கள் அனைத்தும் ஜெயலலிதா அல்லது அவருக்கு நம்பிக்கையான ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் பார்வைக்குப்போன பிறகே பன்னீர் செல்வத்தின் கையெழுத்துக்கு வருகிறது.

மேலும், முதல்வரின் அலுவலகம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது வீட்டின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது. அதுஇன்னும் மாற்றப்படவில்லை. அங்குதான் அரசு செயலாளர்கள், மற்ற அதிகாரிகள் வந்து போய்க் கொண்டுள்ளனர். மேலும்,முதல்வர் பன்னீர் செல்வமும் அங்கு வந்து போகிறார். முக்கிய பைல்களில் கையெழுத்துப் போடுவதற்கு முன்பு ஜெயலலிதாவுக்குபோன் செய்து ஒரு வார்த்தை பன்னீர் செல்வம் கேட்டுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஜெயலலிதா குடியிருக்கும் போயஸ் தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே பன்னீர் செல்வம் குடியேறப்போவதாக தலைமைச் செயலகத்தில் பேச்சு அடிபடுகிறது. இப்போது அமைச்சராக இருந்தபோது குடியிருந்த வீட்டிலேயே பன்னீர்செல்வம் குடியிருந்து வருகிறார். அங்கு ஒரு போன் மட்டுமே இயங்கி வருகிறது. மற்றொரு போன் இயங்கவில்லை என்றுகூறப்படுகிறது.

மற்றபடி பேக்ஸ், ஜெராக்ஸ் இயந்திரங்களும் இல்லை. எனவே கூடிய விரைவில் போயஸ் தோட்டப் பகுதிக்கு பன்னீர் செல்வம்இடம் பெயரலாம் என்று கூறப்படுகிறது.

அதிகாரிகள் மத்தியிலும் முதல்வரைப் பார்ப்பதைக் காடடிலும், ஜெயலலிதாவைப் பார்த்து பேசினால் நடந்து விடும் என்றுதான்பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற