வருமான வரித்துறை அதிரடி சோதனை: ரூ.5 கோடி வைர நகைகள் பறிமுதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோவையில் உள்ள ஒரு நகை செய்யும் கூடத்தில் வருமானவரி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில்கணக்கில் காட்டப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள்பறிமுதல்செய்யப்பட்டன.

இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் அதிகாரிகளுக்கு கோவைவாசி ஒருவரிடம் இருந்து ரகசியத் தகவல் வந்ததது.அந்தத் தகவலின் அடிப்படையில் கோவை நகரில் உள்ள பிரபல நகை செய்யும் கூடத்தில் திடீர் சோதனையில்இறங்கினோம்.

அந்தச் சோதனையில் 127 கிராம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை சட்டத்திற்கு புறம்பாகமறைத்துவைத்துள்ளதைக் கண்டுபிடித்தோம். பிறகு அந்த நகைக் கூடத்தின் அதிபர் வீட்டிலும் நாங்கள் சோதனைநடத்தியதில், அவரது வீட்டிலிருந்து சில முக்கியமான ரெக்கார்டுகள் கிடைத்தன.

இந்த நகைக்கூட அதிபர் தமிழ்நாட்டிலும், மற்ற அண்டை மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலானநகைக்கடைகளுக்கு நகைகள் செய்துதரும் பெரும் வியாபாரி ஆவார் என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற