நான் குற்றமற்றவன் - ஜெ.க்கு முன்னாள் டி.ஜி.பி. கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் தான் குற்றமற்றவர் என்றும் கூறிதமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ரவீந்திரநாத் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனக்குக் கீழ் பணிபுரியும் பெண் போலீஸ் அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், இடமாற்றம்செய்வதற்காக பல போலீசாரிடம் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு டி.ஜி.பி. பதவியில் இருந்துசஸ்பெண்ட் செய்யப்பட்டவர் முன்னாள் டி.ஜி.பி. ரவீந்திரநாத்.

இவர் இதுகுறித்து விளக்கம் அளித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம்பற்றியும் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றியும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எனது பதவி போனதில் இருந்து எந்த உயர் போலீஸ் அதிகாரியையும் சந்திக்க முடியாமல் தவித்து வருகிறேன்.

உண்மையான, நேர்மையான, நம்பிக்கையான, கடமை உணர்வு தவாறாத என்னைப்பற்றி சில பத்திரிக்கைகள்தவறான செய்திகளை வெளியிட்டுவருகின்றன. மேலும் சில எதிர்கட்சிகளும் என்னைப்பற்றி தவறானசெய்திகளைப் பரப்பிவிட்டன.

பயிற்சித்துறை டி.ஜி.பியாகப் பணியாற்றிய போது என்னுடன் பல பெண் டி.எஸ்.பிக்கள், எஸ்.ஐக்கள் மற்றும்காவலர்கள் பணியாற்றினார்கள்.

ஆனால் ஒரு பெண் போலீஸ் கூட என் மீது "செக்ஸ்" குற்றச்சாட்டு கூறவில்லை.

அதேபோல் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவதும் ஆதாரமற்றது.

குறுகிய காலமே டி.ஜி.பி. பதவியில் இருந்த நான் செய்தது போல, போலீசார், அரசு ஊழியர், ஏழைபொதுமக்களுக்கு யாரும் உதவிகள் செய்தது கிடையாது.

ஜெயலலிதா தலைமையில் சிறந்த தைரியமான அரசு நடந்துகொண்டிருந்தபோது எப்படியோ சில எதிர்கட்சிகள்ஊடுறுவி எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டனர். இதனால் நானும் எனது குடும்பத்தாரும் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இது குறித்து விளக்கமாக ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற