அதிமுகவினர் செய்வது சரியே - காளிமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்துவதில் தவறில்லை என்றும் அது நீதிமன்றஅவமதிப்பாகது என்றும் சபாநாயகர் காளிமுத்து கூறினார்.

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், அதற்கு தூண்டுதலாகஇருந்ததாக பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மற்றும் முன்னாள் தமிழக முதல்வர்கருணாநிதியை எதிர்த்தும் அதிமுகவினர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இந்தப் போராட்டங்களின்போது அந்தத் தலைவர்களின் உருவபொம்மைகளும் எரிக்கப்படுகின்றன.

இந்தப் போராட்டத்தில் அமைச்சர்களும் பங்குபேறுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுபாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறினார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியும், இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பது போன்றதாகும் என்றுகுற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அதிமுகவினர் இவ்வாறு போராட்டம் நடத்துவதில் தவறில்லை என்று சபாநாயகர் காளிமுத்துகூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர். அது நியாயமானதுதாள்.

இதனால் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.

அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்பதே என்கருத்து. ராமதாஸ் தற்போது அதிமுககூட்டணியில் இருந்தால் இவ்வாறு கூறியிருப்பரா என்பது சந்தேகமே.

உச்நீதிமன்றத் தீர்ப்பை அதிமுகவினர் அவமதிப்பதாக கருணாநிதி கூறுகிறார்.

உச்சநீதிமன்றத்தின் உருவபொம்மையை எரித்தாலோ, அல்லது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை எரித்தாலோதான்அது போர்ட் அவமதிப்பாகக் கருதப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற