சென்னையில் நில அதிர்வு அதிர்ச்சியில் 2 பேர் சாவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு நில அதிர்வினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் 2 பேர் இறந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு சுமார் 5 விநாடிகளுக்கு நீடித்தது. தொடர்ந்து 2முறை ஏற்பட்ட இந்த நில அதிர்வு காரணமாக, சென்னை மாநகரமே அல்லோலகல்லோலப்பட்டது.

நில அதிர்வை உணர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த அதிர்ச்சி காரணமாக, சென்னையில் 2பேர் உயிரிழந்தனர்.

சென்னை-அயனாவரம் சோமசுந்தரம் 6வது தெருவில், மாடியில் படித்துக் கொண்டிருந்த பார்த்தசாரதி (16) என்றமாணவர், திடீரென்று ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, அதிர்ச்சியில் மயங்கிக் கீழே விழுந்தார்.

உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாகஇறந்து போனார். இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

அதேபோல், சைதாப்பேட்டை ஆலந்தூர் ரோட்டில் வசித்த 60 வயதுப் பெண் ஒருவரும் இறந்தார்.

அவர் தற்செயலாக மாடிப்படியில் இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் நில அதிர்வு ஏற்பட்டது.இதனால், அவர் மாடிப்படிகளிலேயே உருண்டு விழுந்து, அதே இடத்தில் இறந்து போனார். இவருடைய பெயர்விவரம் தெரியவில்லை.

மேலும், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாநகர், தண்டையார்பேட்டை, எழும்பூர் உள்பட பலஇடங்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற