பூகம்பத்தைத் தாங்கும் சக்திதான் ஜெயலலிதா... காளிமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

எல்லாவிதமான அரசியல் பூகம்பம் வந்தாலும் அதை தாங்கும் சக்தி படைத்தவர் ஜெயலலிதா என்று சபாநாயகர்காளிமுத்து கூறியுள்ளார்.

அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் லியாவுதீன் சேட் எம்.எல்.ஏவின் மகள் திருமணம் சென்னையில்வியாழக்கிழமை நடந்தது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் அதற்குப்பதில் சபாநாயகர் காளிமுத்து தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர்பேசுகையில்,

புரட்சித் தலைவி திருமணத்திற்கு வர இயலவில்லை. அவரது பிரதிநிதியாக நான் வந்துள்ளேன்.

சமீபத்தில் சென்னையை பூகம்பம் உலுக்கியது. நிலம் அதிர்ந்ததை நான் சொல்லவில்லை. இது அரசியல் பூகம்பம்.ஆனால் இதுபோன்ற பூகம்பம் எல்லாம் நமது தலைவியை ஒன்றும் செய்து விடாது.

இதை விட பெரிய பூகம்பத்தையெல்லாம் தாங்கக் கூடிய சக்தி படைத்தவர் நமது புரட்சித் தலைவி. எத்தனையோசோதனைகளைத் தாங்கிப் பக்குவப்பட்டுவிட்ட நமது தலைவி இந்த பூகம்பத்தை ஊதித் தள்ளி விடுவார் என்றார்காளிமுத்து.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் பன்னீர் செல்வம் திருமணத்திற்குவரவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற