அறிக்கைவிடப்போகிறேன் - கண்ணப்பன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுயமரியாதையை காக்கும் விதத்திலும், சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிராகவும் விரைவில் அறிக்கைவிடப்போகிறேன் என்று மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன் கூறியுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களைப் பெற்று ஆறிலும் படு தோல்வியடைந்தது மக்கள்தமிழ் தேசம்.

தற்போது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் நீடிக்க விரும்புவதாக கண்ணப்பன் முன்பேஅறிவித்தார்.

இதையடுத்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். ஆனால் இந்த முறைகண்ணப்பன் விஷயத்தில் திமுக கறாராக இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சியின் நிலை என்ன என்று கண்ணப்பனிடம் நிருபர்கள் கேட்டனர்.அதற்குப் பதிலளித்துப் பேசிய கண்ணப்பன் கூறியதாவது,

திமுக கூட்டணியில் எங்களுக்கு தகுந்த இடப்பங்கீடு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால்அந்தக் காத்திருப்புக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே இனியும் காத்திருக்கநாங்கள் விரும்பவில்லை.

விரைவில் எங்கள் சுயமரியாதைக் கொள்கைக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிரான கொள்கைக்கும் உட்பட்டுஅறிக்கை ஒன்றை வெளியிடப் போகிறேன் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற