தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளதால் சென்னைையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும்தொடர்ந்து 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நல்ல மழைபெய்து வருகிறது.

இந்நிலையில் வங்கக் கடலின் வடக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. இது தற்போதுஆந்திர கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து நீடிக்குமானால் தமிழகத்தின் வடக்குகடலோரத்தில் பலத்த மழை பெய்யும்.

தமிழகத்தின் மற்ற இடங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் வானம் மேக மூட்டத்துடன்காணப்படும். இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும். இம் முறை சரியான நேரத்தில்பருவமழை தொடங்கி பெய்து வருவது சென்னையின் குடிநீர் பஞ்சத்தை ஓரளவு தீர்க்க உதவும் என்ற நம்பிக்கைநிலவி வருகிறது.

காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

பலத்த மழை காரணமாகவும், அணைகளில் தொடர்ந்து நீர் மட்டம் பெருகி வரும் காரணத்தாலும், காவிரி டெல்டாபகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்து விட்டதாலும், கர்நாடகம் திறந்துவிட வேண்டிய நீரைதிறந்துவிடாத காரணத்தாலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிடுவதில்சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும்உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத்தில் கடந்த 4 நாட்களாகவே கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவாடிக்கிடந்த குறுவை பயிர்கள் பிழைத்துள்ளன. சில இடங்களில் மழை நீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.ஆனாலும் அதிகமாக வாடிக்கிடந்த குறுவை பயிர்கள் பிழைக்கவில்லை.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா நடவும் துவங்கிவிட்டது. விவசாயிகள் மிகவும் சுறுசுறுப்பாக சம்பாநடவுப் பணியைத் துவக்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மழை பெய்துவருவதால் மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்டிருந்த நீரின் அளவும்குறைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.31 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 16,784 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்தமாதம் 20ம் தேதிக்கு மேல் தொடங்கும். அது குறித்த காலத்தில்தொடங்கி பெய்தால் தண்ணீர் பஞ்சம் தீரூம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற