பன்னீருக்கு கருணாநிதி அறிவுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் பன்னீர் செல்வம் மற்ற அதிமுகவினரை போல் இல்லாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றுமுன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பிரதமர்வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, மாறன் ஆகியோரின்தூண்டுதலால்தான் வழங்கப்பட்டது என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் அந்தத் தலைவர்களின் உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அதிமுகஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. இதுகுறித்து கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக அமைச்சர்கள் எங்களின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். சட்ட அமைச்சரே சட்டம் விலைபோனது என்றுசொல்லி நீதிமன்றத்தை அவமதிக்கிறார். சபாநாயகரும் அதை நியாயப்படுத்துகிறார்.

ஆனால் முதல்வர் பன்னீர் செல்வம் மட்டும் அமைச்சர்கள் போராட்டத்தின் போது தலைவர்களின்உருவபொம்மைகளை எரிக்கவில்லை என்று மறுக்கிறார். இதன்மூலம் அமைச்சர்கள் இதுபோன்ற காரியங்களில்ஈடுபடுவது தவறு என்பதை முதல்வர் உணர்ந்திருக்கிறார் என்பது நமக்கு விளங்குகிறது.

ஜெயலலிதாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியதாகவும் கூறியிருக்கிறார் முதல்வர்.ஆனால் நான் அதுபோன்ற சதிச்செயலில் ஈடுபடவில்லை. தீர்ப்பு வந்ததும், சட்டம் தன் கடமையைச் செய்தது என்றுமட்டும்தான் சொன்னேன்.

இதை உணராமல் மற்ற அதிமுகவினர் போடும் கூச்சலுக்கு முதல்வரும் ஆமாம் போடக் கூடாது. பன்னீர்செல்வம்அதிமுகவின் நீண்டகாலத் தொண்டர், அடக்கமானவர் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவர்களில் இவர் ஒரு தனி பாணி என்றும், தாண்டிக் குதிக்கும்பாணியல்ல என்றும் தெரிகிறது. எனவே முதல்வர் தன் பொறுப்புகளை உணர்ந்து பணியாற்றவேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன் என்று கருணாநிதி கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற